நடுவானில் மீண்டும் டர்புலன்ஸில் சிக்கிய விமானம்! அப்படி என்ன தான் நடந்தது?
தோஹாவிலிருந்து அயர்லாந்து நாட்டிற்கு சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மோசமான டர்புலன்ஸில் சிக்கியதால் விமானத்திற்குள் இருந்த 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் தான் தற்பொழுது சிக்கிய நிலையில் தற்போது இது போன்ற மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மோசமான டர்புலன்ஸில் சிக்கியது. இதன் காரணமாக இது பேங்காக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் 73 வயது முதியவர் ஒருவர் பலியாகிவிட்டார் மற்றும் 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது அவ்வப்போது டர்புலன்ஸ் ஏற்படுவது ஒரு வழக்கமான விஷயம் தான். ஆனால் மிக மோசமாக இல்லாமல் சிறியதாக இருந்தால், இதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் மோசமான டர்புலன்ஸ் ஏற்படும் போது விமானத்திற்குள் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
இப்படியாக தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சம்பவம் என்பது நடந்தது. இந்த சம்பவம் நடந்து அடுத்த ஒரு சில நாட்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தோஹாவிலிருந்து அயர்லாந்தை சேர்ந்த டப்லின் விமான நிலையத்திற்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. கியூஆர் 017 என்ற எண் கொண்ட இந்த விமானம் நடுவானில் பிரச்சனையில் சிக்கியது.

இந்த விமானம் டப்லின் விமான நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டர்புலன்ஸ் ஏற்பட்டது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் எல்லாம் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டார்கள். இந்த சம்பவத்தில் ஆறு பயணிகள் மற்றும் ஆறு விமான பணி பெண்கள் உள்ளிட்ட 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு டப்லின் விமான நிலையத்திற்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமான லேண்டிங் எமர்ஜென்சியை அறிவித்தார்கள். அதன்படி விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் என அனைவரும் உஷார் படுத்தப்பட்டு அவசர தரை இயக்கத்திற்கு தயாரானார்கள். இந்நிலையில் இந்த விமானம் அவசர அவசரமாக டப்லின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக விமானம் எந்த விதமான பிரச்சினையும் இன்றி பத்திரமாக தரை இறங்கியது. விமானம் நடுவானில் இருக்கும் போது ஏற்பட்ட நட்புடன் காரணமாக விமானத்திற்குள் இருந்த 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விமானங்களில் இந்த டர்புலன்ஸ் ஏற்படுவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். டர்புலன்ஸ் என்பது விமானம் உடனடியாக தனது உயரத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும்போது இப்படியான டர்புலன்ஸ் ஏற்படும். விமானிகள் இதுபோன்ற செயல்களை செய்ய ஈடுபட மாட்டார்கள். ஆனால் விமானத்திற்கு மேலே வெற்றிடம் ஏற்பட்டால் விமானம் தானாக அதன் உயரத்தை குறைத்து விடும். அதேபோல விமானத்தின் கீழே வெற்றிடம் ஏற்பட்டால் தானாக தனது உயரத்தை அதிகரித்து விடும்.
அதனால் விமானிகள் தங்கள் செல்லும் பாதையில் வெற்றிடங்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து செல்ல வேண்டும். சில நேரம் எதிர்பாராத வகையில் இந்த வெற்றிடத்திற்குள் விமானம் சிக்க நேரிடும். இப்படியாக சிக்கல் நேரும்போதுதான் டர்புலன்ஸ் ஏற்படும். வெற்றிடம் குறைவான உயரத்திற்கு இருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது. பல நூறு அடிகளுக்கு மேல் வெற்றிடம் இருக்கும் போது அது விமானத்திற்கு பெரிய மதிப்பு ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான ஒட்டிகளுக்கு டர்புலன்ஸ் செயல்படுவதை முன்னரே உணரக்கூடிய தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் தற்போது வந்துவிட்டதால் ஏற்படும் போது விமானிகள் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்தல் செய்வார்கள். உடனடியாக விமானத்தில் இருக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் விமானம் டர்புலன்ஸ் சிக்கினால் பயணிகளுக்கு பிரச்சனை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








