இப்படி ஒரு விஷயம் இதுவரை நடந்ததேயில்ல! 118 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த அதிசயம்!

ஜெனீவா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ இன்று கத்தாரில் கோலாகலமாக துவங்குகிறது. சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த மோட்டார் ஷோ இன்று நடக்கிறது. ஜெனீவாவில் நடக்காத இந்த மோட்டார் ஷோவிற்கு ஏன் ஜெனீவா இண்டர்நேஷனல் மோட்டார் ஷோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஜெனீவா இண்டர்நேஷனல் மோட்டார் ஷோ என்பது ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சியாக பார்க்கப்படுகிறது. சுமார் 118 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கண்காட்சி துவங்கியது. நூற்றாண்டுகளாக நடக்கும் இந்த ஆட்டோமொபைல் கண்காட்சி உலகின் மிக முக்கியமான கண்காட்சியாக பார்க்கப்படுகிறது. இதில் புதிய தயாரிப்புகள் புதிய தொழில்நுட்பங்கள், புதிய அறிமுகங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்படுகின்றன.

geneva international motor show in qatar

இதுவரை இந்த கண்காட்சி ஜெனீவாவில் மட்டுமே நடந்து வந்தது. இதுவரை ஜெனீவாவை விட்டு வெளியே வேறு எங்கும் நடந்தது இல்லை. இந்நிலையில் முதன்முறையாக இன்று இந்த கண்காட்சி கத்தாரில் உள்ள தோகாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த ஜெனீவா இண்டர்நேஷனல் மோட்டார் ஷோ கண்காட்சி நடைபெறவில்லை. கொரோனா காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கத்தார் நாட்டிற்கும் இந்த ஜெனீவா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோரூம் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கத்தார் நாட்டில் இந்த கண்காட்சியை நடத்தும் படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் அளவு அதிகரித்து வருவது முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

geneva international motor show in qatar
கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் புதிய கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது இதனால் கத்தார் போன்ற நாட்டில் இந்த கண்காட்சியை நடத்துவது எளிதாக அந்த நாட்டு மக்களையும் வாடிக்கையாளர்களையும் சென்றடைய முடியும் என கருத்தில் கொண்டு இந்த முயற்சியை தெளிவாக இண்டர்நேஷனல் மோட்டார் ஷோ நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த கண்காட்சியில் மொத்தம் 30 ஆட்டோமொபைல் கம்பெனிகள் இடம் பெற உள்ளன. முக்கியமாக டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் போன்ற முக்கிய நிறுவனங்களும் லம்போர்கினி, மெக்லாரன் போன்ற சூப்பர் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.

geneva international motor show in qatar

இந்த கண்காட்சியின் முதல் நாளாக இன்று ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறையின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. சனிக்கிழமை முதல் அதாவது நாளை முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு இந்த கண்காட்சியை பார்க்க அனுமதி வழங்கப்படும். இந்த கண்காசியுடன் கூடவே கத்தார் பார்முலா 1 போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் எல்லாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோ கண்காட்சியை பார்ப்பதற்கான டிக்கெட் விலை 50 கத்தார் ரியால் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1200 என்ற விலையில் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் டிக்கெட் தீர்ந்து விட்டன. ஒரு சில டிக்கெட் மட்டுமே தற்போது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் பல முக்கிய தயாரிப்புகள் இடம் பெற உள்ளன. இது உலக அளவிலான ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதும் ஒரு கண்காட்சியாக பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான பல தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. பல புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மிக விரைவாக ஆட்டோமொபைல் சந்தைகளில் மிக முக்கியமான நாடாக மாறி உள்ளதை போல மத்திய கிழக்கு நாடுகளும் அதிகமாக ஆட்டோ மொபைல்களை வாங்கும் நாடுகளாக மாறி வருகிறது. இதன் எதிரொலியாகவே ஜெனீவா ஆட்டோமொபைல் கண்காட்சி ஜெனீவாவை விட்டு வெளியே அதாவது கத்தாரில் வைத்து நடைபெறுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 14:17 [IST]
English summary
Qatar venue for the geneva international motor show all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X