இந்த கார் விலை விட ஏலம் போகும் விலை ஜாஸ்தியா இருக்கும்! இந்த காருக்கு என்ன ஸ்பெஷல்? யார் பயன்படுத்திய கார்?
இங்கிலாந்து ராணி பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வரப்போகிறது. மற்ற காருக்கும் இந்த காருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது. இந்த கார் எவ்வளவுக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை காணலாம் வாருங்கள்.
மறைந்த இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 2004 ஆம் ஆண்டு லண்டனில் புதிதாக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மூன்றாம் தலைமுறை கார் ஒன்றை வாங்கினார். இந்த காரை அவர் கஸ்டமைஸ் செய்து ராஜ குடும்பத்திற்கு தகுந்தார் போல் பல்வேறு வசதிகள் நிறைந்த காராக இந்த காரை மாற்றி அப்பொழுது அவர் வாங்கினார்.

இந்த காரை அவரே பல்வேறு இடங்களுக்கு ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை தற்போது இங்கிலாந்து ராஜ குடும்பம் ஏலத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ராணி பயன்படுத்திய கார் தற்போது ஏலத்துக்கு வரப்போகிறது. இதை வாங்க ஏகப்பட்ட மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இதன்படி வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி இந்த ஏலம் நடக்க உள்ளது என்.இ.சி கிளாசிக் மோட்டார் ஷோவில் இந்த ஏலம் நடைபெற உள்ளது. லேண்ட்ரோவர் நிறுவனம் இந்த காரை இங்கிலாந்து ராணி பயன்படுத்துவதற்காக பல்வேறு வசதிகள் நிறைந்த காராக உருவாக்கியது. அதன்படி இந்த கார் எப்சம் கிரீன் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள அம்சம் வேறு எந்த காரிலும் பார்க்க முடியாதபடி இருக்கிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை சேண்டு கைடு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காரின் சீட்டுகள் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புற கதவில் இரண்டு ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதை திறப்பதற்காக இரண்டு தனி தனி பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருபக்கமும் இருப்பவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் சுலபமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் பின் பக்கத்தில் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரில் பயணிக்கும் போது பின் சீட்டில் உள்ள பயணிகள் பாதுகாப்பாக இதைப் பிடித்துக் கொள்ள முடியும். மேலும் காரில் இருந்து ஏறும்போதும் சரி இறங்கும்போதும் சரி சுலபமாக ஏறி இறங்க இது வசதியாக இருக்கும்.
மேலும் இந்த காரின் பின்புறத்தில் நாய்களை ஏற்றி செல்ல வசதியாக கார்கோ பகுதி வழக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாய்களை கூண்டில் ஏற்றிக்கொண்டு எடுத்துச் செல்ல முடியும். இந்த காரின் முன்பக்கம் உள்ள கிரில் மற்றும் லைட் மட்கார்டு ஆகிய பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிளீனான ரைடு கிடைக்கும். என்பதால் இதை செய்துள்ளது நிறுவனம்.
இரண்டாம் எலிசபெத் ராணி பயன்படுத்திய இந்த கார் இதுவரை 1.10 லட்சம் மைல்கள் ஓடியுள்ளதாக அதன் ஓடோமீட்டர் காட்டுகிறது. இந்த கார் முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அதன் பின்பு 2005 ஆம் ஆண்டு முதல் சர்வீஸ் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தான் கடைசியாக சர்வீஸ் செய்யப்பட்டது.
இந்த காரின் இஞ்சினை பொறுத்த வரை 4.4 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 282 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கார் மீண்டும் ஏலத்திற்கு வரவுள்ளது. இந்த கார் வாங்கும்போது BN04 EPU என்ற நம்பர் பிளேட் வழங்கப்பட்டது. அதே நம்பர் பிளேட் உடன் தான் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
கார் தற்போது எவ்வளவு ஏலத்துக்கு போகும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ராணி எலிசபெத் பயன்படுத்திய கார் என்பதால் இந்த காருக்கு அதிகமான மவுசு இருக்கிறது. அதனால் ஏலத்தில் எடுக்க பலர் போட்டி போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நிச்சயம் கோடி கணக்கிலான விலையில் ஏலம் போகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்து அரசு குடும்பம் பயன்படுத்திய வாகனங்கள் எல்லாம் ஏலத்திற்கு வரும்போது மிக அதிகமான தொகையை ஏலம் போய் உள்ளன. அதன்படி மறைந்த இங்கிலாந்து ராணி பயன்படுத்திய இந்த காரும் அதிக விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு ஏலம் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications