இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?

எத்தனை சொகுசு கார்களை வைத்திருந்தாலும், கம்பீரமான லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களை வைத்திருப்பதே தனி கெத்துதான். இதனாலேயே பெரிய பெரிய அரசியல்வாதிகள் பலர் வாங்கும் முதல் லக்சரி கார் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல் ஆகவே இருக்கும். அதேநேரம் சினிமா நடிகைகளிடமும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இந்த வகையில் இந்த பிராண்டின் லக்சரி எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் இந்திய நடிகைகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆலியா பட்

சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாய் ஆகியுள்ள பாலிவுட் நடிகை ஆலியா பட் -டும் நடிகை கத்ரீனா கைஃப் போல் முன்பு பயன்படுத்திவந்த ஆடி க்யூ7 எஸ்யூவி காருக்கு பதிலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை தற்சமயம் பயன்படுத்தி வருகிறார். ஆலியா பட்டின் ரேஞ்ச் ரோவர் வோக் காரின் விலையும் ஏறக்குறைய ரூ.2 கோடி ஆகும். 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் உடன் இயங்கும் இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அதாவது இந்த காரில் மொத்தம் 8 கியர்கள் கிடைக்கும்.

லேண்ட் ரோவர் காரை வைத்திருக்கும் இந்திய சினிமா நடிகைகள்!!

கரீனா கபூர்

பெபோ எனப்படும் பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. இவரிடம் இருப்பது ரேஞ்ச் ரோவரின் வோக் வேரியண்ட் கிடையாது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் ஆகும். வோக் மாடலை காட்டிலும் ஸ்போர்ட் சற்று விலைமிக்கது ஆகும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மட்டுமின்றி, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் ஜீப் வ்ராங்க்லர் காரையும் கரீனா கபூர் வைத்துள்ளார்.

கத்ரீனா கைஃப்

முன்னணி பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் வெள்ளை நிறத்தில் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்திருக்கிறார். மும்பை நகரத்திற்குள் பயணிக்க அவர் பயன்படுத்தும் இந்த காரை நடிகர் சல்மான் கான் பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. கத்ரீனா கைஃப் ரேஞ்ச் ரோவர் வோக் காரின் எஸ்.இ வேரியண்ட்டை கொண்டுள்ளார். இதன் ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.2.72 கோடி என்ற அளவில் உள்ளது. முன்னதாக வோக் காருக்கு பதிலாக மும்பைக்குள் பயணிக்க ஆடி க்யூ7 காரை கத்ரீனா கைஃப் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேண்ட் ரோவர் காரை வைத்திருக்கும் இந்திய சினிமா நடிகைகள்!!

டிசா படானி

டிசா படானி, பாலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் இளம் நடிகை. இளம் நடிகைகள் பொதுவாகவே கார்களை தாங்களே ஓட்ட தயங்குவர். ஆனால் கார் டிரைவிங் பிரியரான டிசா படானி பலமுறை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை ஓட்டியதை வீடியோக்களில் பார்க்க முடியும். முந்தைய காலங்களில் டிசா படானியிடம் ஹோண்டா சிவிக் மற்றும் செவ்ரோலெட் க்ரூஸ் கார்களும் இருந்தன.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

இலங்கையை சேர்ந்த நடிகையாக அடையாளம் காணப்பட்டு, தற்சமயம் பிரபலமான இந்திய பாலிவுட் நடிகையாக உருவெடுத்து இருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஒன்றும் உள்ளது. ஆனால் சற்று பழைய தலைமுறை மாடலான இது உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டதாக உள்ளது. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சமீபத்தில்தான் மெர்சிடிஸ் மேபக் எஸ்500 காரை டெலிவிரி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேண்ட் ரோவர் காரை வைத்திருக்கும் இந்திய சினிமா நடிகைகள்!!

சுருதி ஹாசன்

நடிகை சுருதி ஹாசனுக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். நம் தமிழ் பொண்ணு என்பது மட்டுமின்றி இவர் பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் ஆவார். அத்துடன், ரேஞ்ச் ரோவர் எவோக் காரை தமிழ் சினிமாவில் வைத்திருக்கும் மிகவும் சில பிரபலங்களுள் சுருதி ஹாசனும் ஒருவர். இவரிடம் ஆரம்பத்தில் எவோக் கார் தான் இருந்த நிலையில், பின்னர் தனது ரேஞ்ச் ரோவர் காரை ஸ்போர்ட் மாடலாக அப்டேட் செய்தார்.

அனுஷ்கா சர்மா

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் முன்னணி பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் ரேஞ்ச் ரோவர் வோக் காருக்கு சொந்தகாரர் ஆவார். கத்ரீனா கைஃப் -இடம் மட்டுமே இந்த கார் வெள்ளை நிறத்தில் உள்ளது. அடுத்து பார்த்துள்ள இருவரிடமும் அலுமினியம் கிரே நிறத்தில் உள்ளது. அதேநேரம், அனுஷ்கா சர்மாவிடம் இந்த கார் அளவில் சற்று பெரிய 4.4 லிட்டர் வி8 என்ஜின் உடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, February 4, 2023, 18:14 [IST]
English summary
Queens of indian cinemas who own land rover range rover cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X