ஆர் அஷ்வினை ஒருமுறை கூட ரோல்ஸ்-ராய்ஸ் காரில் பார்த்ததில்லை! இந்த கார் கூடவா இவர்கிட்ட இருக்கு?

ரவிசந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin), இந்த பெயரை கேட்டாலே பல கிரிக்கெட் பேட்ஸ்மேன் (Cricket Batsman)-களுக்கு அல்லுவிடும். அந்த அளவிற்கு விக்கெட்களை குவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா (Austalia) இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் (Brisbane)-இல் டிராவில் முடிந்த பிறகு செய்தியாளர்களை கேப்டன் ரோகித் சர்மா (Rohit Sharma) உடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அஷ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அஷ்வின் என்றதுமே கிரிக்கெட் பற்றிய அவரது ஆர்வம் தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு, போட்டி முடிந்த பின்பும் கிரிக்கெட் பற்றியே எல்லா நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் அஷ்வின் ஆவார். தற்போது ஓய்வு முடிவை அறிவித்த போதிலும், கிரிக்கெட்டையும் அஷ்வினையும் நிச்சயமாக பிரிக்க முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2025 ஐபிஎல் (IPL)-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாட உள்ளார்.

ravichandran ashwin owned rolls royce

தற்போதைய நிலவரப்படி, ஆர் அஷ்வினின் சொத்து மதிப்பு ரூ.132 கோடி என கூறப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மட்டுமின்றி, சில விளம்பரங்களிலும் அஷ்வின் நடித்துள்ளதை பார்த்திருக்கிறோம். மேலும், அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் யூடியூப் (Youtube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) வாயிலாகவும் அஷ்வினுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

இவ்வளவு சொத்துமிக்கவரிடம் சொகுசு கார் இல்லை என சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். இருப்பினும், அஷ்வின் சொகுசு கார்கள் மீது பெரியதாக ஆர்வமிக்கவர் போல் தெரியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆர் அஷ்வினிடம் தற்சமயம் இரு சொகுசு கார்கள் மட்டுமே உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ravichandran ashwin owned rolls royce

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce): அஷ்வினிடம் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் கார் உள்ளது என்பது மட்டுமே நமக்கு தெரியுமே தவிர்த்து, ரோல்ஸ்-ராய்ஸில் அது எந்த மாடல் என்பது தெரியவில்லை. அஷ்வின் வைத்திருப்பது ரூ.6 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் கார் என கூறப்படுகிறது. ரூ.6 கோடி விலையில் தற்சமயம் எந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரும் விற்பனையில் இல்லை.

இந்தியாவில் தற்சமயம் 3 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. ஸ்பெக்டர் இவி (Spectre EV), கல்லீனன் (Cullinan) மற்றும் பண்டோம் (Phantom) என்பவை அந்த 3 கார்கள் ஆகும். இதில், கல்லீனனின் விலை தற்சமயம் ரூ.6.95 கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒருவேளை, அஷ்வின் வாங்கிய சமயத்தில் கல்லீனன் காரின் விலை ரூ.6 கோடி என்கிற அளவில் இருந்திருக்கலாம்.

ravichandran ashwin owned rolls royce

ஆடி க்யூ7 (Audi Q7): அஷ்வினிடம் உள்ள மற்றொரு லக்சரி கார் ஆடி க்யூ7 ஆகும். அஷ்வினின் இந்த ஆடி காரின் படம் எதுவும் நமக்கு கிடைக்க பெறவில்லை. இந்தியாவில் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என 2 விதமான வேரியண்ட்களில் ஆடி க்யூ7 கார் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.88.66 லட்சம் மற்றும் ரூ.97.81 லட்சமாக உள்ளது.

இதில் எந்த வேரியண்ட்டில் க்யூ7 காரை அஷ்வின் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. விலைமிக்க டெக்னாலஜி வேரியண்ட்டில் வைத்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் க்யூ7 காரை கடந்த நவம்பர் மாதத்தில்தான் ஆடி நிறுவனம் அப்டேட் செய்தது. நிச்சயமாக, இதற்கு முன்பே ஆடி க்யூ7 காரை அஷ்வின் வாங்கியிருப்பார் என எதிர்பார்க்கிறோம்.

ravichandran ashwin owned rolls royce

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆர் அஷ்வின் எப்போதும் பல்வேறு விஷயங்களை யோசித்துக் கொண்டே இருப்பவர். அந்த வகையில், கடந்த 2023ஆம் ஆண்டில் நிஸான் மோட்டார் இந்தியா (Nissan Motor India) நிறுவனத்தின் சென்னை கோல்ஃப் (Golf) போட்டி தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிசந்திரன் அஷ்வினின் 2வது இன்னிங்க்ஸுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 16:42 [IST]
English summary
R ashwin owned rolls royce and audi q7 luxury cars check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X