ரோட்டில் நடந்து சென்ற மெழுகு சிலை! அவங்களா இது! சாதாரண கார்ல வந்து இறங்கியதை கண்ணுல பாத்தும் நம்ப முடியல!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ஸ்கோடா குஷாக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 19.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். பொதுவாக இந்த விலையில் கிடைக்கும் கார்களை திரையுலக நட்சத்திரங்கள் பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதுதான் வழக்கம்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக பிரபலமான நடிகை ஒருவர் ஸ்கோடா குஷாக் காரை பயன்படுத்தியுள்ளார். அவர் ராஷி கண்ணா (Raashii Khanna) ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
தமிழை பொறுத்தவரை, தனுஷ் (Dhanush) நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் (Thiruchitrambalam) உள்ளிட்ட திரைப்படங்களில் ராஷி கண்ணா நடித்துள்ளார். எனவே தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள இவர், ஸ்கோடா குஷாக் காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ஸ்கோடா குஷாக் காரின் 1.0L Monte Carlo TSI AT வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட் 17.22 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 21 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.
இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த வேரியண்ட்டாக கருதப்படுகிறது. எனவே ஸ்கோடா குஷாக் காரின் அதிகமாக விற்பனையாகும் வேரியண்ட்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருப்பது 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 114 பிஹெச்பி பவர்/178 என்எம் ஆக உள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுடன், ஸ்கோடா குஷாக் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா குஷாக் ஒரு பிரீமியமான கார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஸ்கோடா குஷாக் காரில் செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்களுடன், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் என்று ஏகப்பட்ட வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. வேரியண்ட்களை பொறுத்து வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்றாலும், இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
எனினும் திரையுலக நட்சத்திரங்கள் போன்ற பிரபலமான மனிதர்கள், இதற்கு முன்பாக ஸ்கோடா குஷாக் காரை அதிகம் பயன்படுத்தி நாம் பார்த்தது இல்லை. இதன் காரணமாக நடிகை ராஷி கண்ணாவின் தற்போதைய வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications








