தனுஷ் கூட ஒரு படத்துலதான் நடிச்சாரு.. அதுக்குள்ள இப்படியா.. ஆளே மாறிட்டாரு.. ரெண்டு நாய்களையும் விட்டு வைக்கல!

நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகிய அசத்தலான திரைப்படங்களில் ராயன்-ம் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பால் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர்களில் ஒருவராகவே மாறிவிட்டார், தனுஷின் இரண்டு தம்பிகளில் ஒருவராக நடித்த சந்தீப். மூத்த தம்பியாக நடித்திருப்பார். இவர் மிக முக்கியமாக 'வாட்டர் பாக்கெட் மூஞ்சி' பாடலின் வாயிலாக இளம் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் மாறிவிட்டார். இந்த நடிகரே தற்போது மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இந்த காரை அவர் தனக்காக வாங்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். ஆமாங்க, இந்த காரை தன்னுடைய பெற்றோர்களுக்காகவே நடிகர் வாங்கி இருக்கின்றார். மிக முக்கியமாக அவர் அவருடைய அம்மா கனக துர்காவிற்காகவே வாங்கி இருக்கின்றார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டே சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கின்றார் சந்தீப்.

Sundeep kishan gifted range rover luxury car to his mom

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Ramge Rover) சொகுசு எஸ்யூவி (SUV) ரக காரையே அவர் பரிசாக தந்திருக்கின்றார். இந்த கார் பரிசை அவரே அவருடைய இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். தந்தை, அம்மா மற்றும் தன்னுடைய இரண்டு நாய்களையும் விட்டு வைக்காமல் அந்த காருடன் போஸ் கொடுத்து அப்படத்தை சந்தீப் பகிர்ந்திருக்கின்றார்.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மாடலில் கிடைக்கும் ஆரம்ப நிலை மாடலான ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) சொகுசு எஸ்யூவி கார் மாடலையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இதன் ஆரம்ப விலையே ரூ. 67.90 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்களை தாங்கி இருப்பதிலும் இந்த சொகுசு கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரில் பயணிகளின் மனதைக் கவர வேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது, லேண்ட் ரோவர் நிறுவனம்.

அந்தவகையில், டச் வசதிக் கொண்ட 11.4 அங்குல வளைவான திரையை இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது. இது பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். இதேபோல் டிரைவருக்கான திரையும் மிகப் பெரிய அளவிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதன் அளவு 12.3 அங்குலம் ஆகும்.

இது நேவிகேஷன், வாகனத்திற்கான செட்டிங்கை மாற்றுவது என பலவற்றிற்கு உதவியாக இருக்கும். தொடர்ந்து, 3டி சரவுண்ட் சவுண்டு கேமிரா, 360 டிகிரி பார்வை திறன் மற்றும் தெளிவான பார்வையை வழங்கும் திறனுடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க, டிரைவர் அசிஸ்டன்ஸ் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக பார்க் செய்வது மிகவும் சுலபமானதாக இருக்கும். இதுமட்டுமல்ல முன் மற்றும் பின் பக்கத்தின் வாகன நடமாட்டத்தை நோட்டமிட்டு அதுகுறித்த எச்சரிக்கையை அது வழங்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, காற்றை சுத்தமாக்கும் கருவி, சூடு மற்றும் குளிர்ச்சியாக்கும் திறன் கொண்ட இருக்கைகளும் இந்த காரில் பயணிகளின் சௌகரியமான ரைடு அனுபவத்திற்காக வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, 10 வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட கேபின் லைட், சாவியே இல்லாமல் நுழையும் வசதி, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், மெரிடியன் சவுண்டு சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை தாங்கி இருக்கும் காரையே தன்னுடைய அம்மாவிற்கு பிறந்த நாள் பரிசாக ராயன் பட நடிகர் வழங்கி இருக்கின்றார். இவர் இப்போதும் பணிக்கு சென்று வருவதாகக் கூறப்படுகின்றது. அந்த பணிக்கு சென்று வர இந்த கார் மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் சந்தீப் தெரிவித்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காருக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் நல்ல வரவேற்புக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாகவே சந்தீப் இந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த கார் அதிக சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 5:30 [IST]
English summary
Raayan actor sundeep kishan gifted land rover range rover luxury suv to his mom
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+