சூப்பர்பைக்கில் ரேஸிங் செய்த இளைஞர் பரிதாப பலி: விபத்தை படம்பிடித்த நண்பன் கைது..!!

Written By:

அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் பைக் மாடலில், அதிவேகத்தில் பயணித்த இளைஞர் ஒருவர், திடீரென பைக்கில் கட்டுபாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டு உயிரழந்தார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

டெல்லியில் மாண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த விபத்தை குறித்து போலீசார் விசாரித்த போது,

விபத்து நடைபெற்ற சமயத்தில் மரணமடைந்த அந்த இளைஞர் சக நண்பர்களுடன் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

கடந்த திங்கள்கிழமை காலை நடைபெற்ற இந்த சம்பவத்தில் விபத்தில் இறந்த இளைஞரின் பெயர் ஹிமான்ஷூ பன்சால் என்பது தெரியவந்தது.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

மாண்டி ஹவுஸ் பகுதியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது, இளைஞர் ஹிமான்ஷூ பஞ்சால், உடன் வந்த நண்பர்களுடன் சாலையில் ரேஸிங்கில் ஈடுபட்டுள்ளார்.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

ரேஸிங் தொடங்கப்பட்ட சமயத்தில் ஹிமான்ஷூ பன்சால் பென்னலி டிஎன்டி 600ஐ பைக்கை ஓட்டியுள்ளார். இதே பைக்கை மரணமடைந்த ஹிமான்ஷூவின் மற்றொரு நண்பரும் பயன்படுத்தியுள்ளார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

இவர்கள் இருவர் செய்யும் ரேஸிங் ஸ்டண்டுகளை படம்பிடிக்க, ஹெல்மெட்டில் கேமராவை பொருத்திக்கொண்டு, கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை ஓட்டியவாரே மேலும் ஒரு நண்பர் பின்னே வந்துகொண்டு இருந்துள்ளார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

விபத்து குறித்து போலீசார் தெரிவித்துள்ள தகவல்களின் படி, ரேஸ் செய்த இளைஞர்கள் அனைவரும் டிராஃபிக் நிறுத்தத்தில் கூட அதிவிரைவாக பைக்குகளை ஓட்டியதாக கூறுகின்றனர்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

மாண்டி ஹவுஸ் பகுதியில் அனைவரையும் முந்திசென்ற ஹிமான்ஷூ பன்சாலின் வழியில் திடீரென ஒரு வழிப்போக்கர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

இதை சற்றும் எதிர்பாராத ஹிமான்ஷீ வழிப்போக்கரை தவிர்க்க முயல்கையில் பைக் கட்டுபாட்டை இழந்தது.

இதனால் சாலை பயணியையும் இடித்துவிட்டு பைக்கை ஓட்டிய ஹிமான்ஷூ பல அடி தூரம் சாலையில் இருந்து நடைமேடைக்கு தூக்கி வீசப்பட்டார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

விபத்து ஏற்பட்ட மோட்டார் சைக்கிள், சாலையில் இருந்து சிறுது தூரம் இழுத்து சென்று, பிறகு மிகவும் நிலைகுலைந்து போய் நின்றது.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

இந்த அத்தனை காட்சிகளும், பின்னே கவாஸாகி பைக்கில் ஹிமான்ஷூவை பின் தொடர்ந்து வந்த நண்பரின் கேமராவில் பதிவாகியுள்ளது.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

அடிப்பட்ட நிலையில் ஹிமான்ஷூவின் உடலிருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகவே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்துவிட்டார்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

ஹிமான்ஷூ உடன் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக பைக் ரேஸின் ஈடுபட்ட அவரது நண்பர்களிடமும் தற்போது டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக செயல்திறன் பெற்ற பைக்கில் ரேஸிங் சென்ற இளைஞர் பலி..!!

மரணமடைந்த ஹிமான்ஷூ விபத்தில் பயன்படுத்திய பென்னல்லி டிஎன்டி 600ஐ பைக் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சமாகும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இருந்தாலும் ஹிமான்ஷூ பைக்கை சாலையில் செலுத்திய விதமே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Racing In A Superbike 24Year Old Dies. Accident Caught on Camera. Click for Details...
Story first published: Wednesday, August 16, 2017, 12:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark