ராதே மா.,வின் ஜாகுவார் 'ரதம்'.. போலி முகவரியில் பதிவு என புது சர்ச்சை!

Written By:

மும்பையை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார்தான் இப்போதைக்கு மீடியாவின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. எளிமையான வாழ்க்கை, உண்மையான பக்தி போன்றவற்றிலிருந்து மாறுபட்ட மாடர்ன் சாமியார்களுக்குத்தான் இப்போது மவுசு அதிகம்.

அரண்மனையை விஞ்சும் வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட ஆசிரமங்கள், நூற்றுக்கணக்கான பக்த பரிவாரங்கள், சாமியார் போர்வையில் சல்லாபம், கூடவே வெளியிடங்களுக்கு செல்ல ரதம் போன்ற ஆடம்பர கார் போன்றவைகள்தான் மாடர்ன் சாமியார்களுக்கான இலக்கணமாக மாறிவிட்டது.

அந்த வகையில், வரதட்சணை கொடுமை, கையில் சூலாயுதத்துடன் விமானத்தில் பயணித்தது, ஆபாச உடை அணிந்தது என சாமியார்களின் இலக்கணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட மாடர்ன் பெண் சாமியாராக செய்திகளில் அடிபட்டு வருகிறார் ராதே மா. இந்தநிலையில், அவரது ஆஸ்தானமானக பயன்படுத்தும் ஆடம்பர கார் குறித்தும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

ராதே மா ரதம்

ராதே மா ரதம்

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா கருப்பு நிற ஜாகுவார் எக்ஸ்ஜே 3.0 லாங் வீல் பேஸ் மாடலை பயன்படுத்தி வருகிறார். இது ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆடம்பர கார் வகையில் சேர்ந்தது.

சிவப்பு மயம்

சிவப்பு மயம்

ராதே மா சாமியாருக்கு சிவப்பு நிறம்தான் பிடிக்குமாம். இதனால், அவர் பயன்படுத்தும் கருப்பு நிற ஜாகுவார் காரின் சக்கரங்கள் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், ராதே மா அமரும் 'ராஜ' இருக்கையும் சிவப்பு நிறம்தானாம்.

காரின் விலை

காரின் விலை

ராதே மா பயன்படுத்தும் ஜாகுவார் காரின் விலை ஒன்றரை கோடிக்கும் அதிகம்.

இடவசதி

இடவசதி

ஜாகுவார் எக்ஸ்ஜே கார் லாங் வீல் பேஸ் கொண்ட மாடல். இது உட்புறத்தில் மிக மிக சிறப்பான இடவசதியை கொண்டது.

பவர்ஃபுல் கார்

பவர்ஃபுல் கார்

ஆடம்பர வசதிகளில் மட்டுமல்ல, இந்த கார் அதிசக்திவாய்ந்தது. இந்த காரில் 271 பிஎச்பி சக்தியையும், 600 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் உள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

புரொஜெக்டர் ஹெட்லைட் சிஸ்டம், டச்ஸ்க்ரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்டரி போன்ற பல வசதிகள் உள்ளன. 6 ஏர்பேக்குகள் உள்பட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டது.

புது சர்ச்சை

புது சர்ச்சை

ராதே மாவின் கருப்பு நிற ஜாகுவார் காரின் பதிவு எண் MH04 FM 9 என்பதாகும். இந்த கார் சஞ்சீவ் குப்தா என்ற பெயரில் கிமயா அபார்மென்ட் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பதிவு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலி முகவரி

போலி முகவரி

ராதே மா பயன்படுத்தும் ஜாகுவார் கார் குறித்து ஏபிபி லைவ் என்ற தொலைக்காட்சி நடத்திய விசாரணையில், அந்த முகவரியில் அப்படி ஒரு ஆள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாம். இதனால், அவர் மீது அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

தல்லி பாபா

தல்லி பாபா

ராதே மா காரில் பின்புறம் ஏறுபவர், அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் தல்லி பாபா.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Radhe Maa Controversy: Self-styled godwoman Radhe Maa has luxury car collection. She loves to travel in Jaguar XJ car. Radhe Maa known for her high-profile luxury lifestyle.
Story first published: Saturday, August 15, 2015, 15:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark