துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையுடன் ஒன்றரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா! சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க!
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலர் வைத்துள்ளனர். இதில், மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அத்துடன் தொழில் அதிபர்கள் பலரிடமும், டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி கார்கள் சொந்தமாக உள்ளன.
இதில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பமும் ஒன்றாகும். இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த கார்களை ஏராளமாக வைத்துள்ள குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானி குடும்பம் உள்ளது. அவர்களின் கார் கலெக்ஸனில் (Car Collection), டொயோட்டா வெல்ஃபையர் காருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், முகேஷ் அம்பானி குடும்பத்தின் புதிய உறுப்பினராகவும், அதே நேரத்தில் முக்கிய உறுப்பினராகவும் உள்ள ராதிகா மெர்ச்சண்ட் (Radhika Merchant), டொயோட்டா வெல்ஃபையர் காரில் ஏறி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த வைரல் வீடியோவில், ராதிகா மெர்ச்சண்ட் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை புடை சூழ வந்து, டொயோட்டா வெல்ஃபையர் காரில் ஏறி செல்வதை நம்மால் காண முடிகிறது. ராதிகா மெர்ச்சண்ட் பயணம் செய்தது, வெள்ளை நிற டொயோட்டா வெல்ஃபையர் கார் ஆகும்.

அந்த காரின் நிறத்திற்கு ஏற்ப ராதிகா மெர்ச்சண்ட்டும் வெள்ளை நிற உடையை அணிந்துள்ளார். இவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) மனைவி ஆவார். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் சமீபத்தில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் வெகு விமரிசையாக நடைபெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ராதிகா மெர்ச்சண்ட் தற்போது பயன்படுத்திய டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப விலையே 1.22 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை முறையே சுமார் 1.52 கோடி ரூபாய் மற்றும் 1.64 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 193 பிஎஸ் பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், e-CVT கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இது விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லை. இதில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 15 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ட்யூயல் பேனல் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராதிகா மெர்ச்சண்ட் பயன்படுத்திய டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. இருப்பினும் 2.10-2.62 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் லெக்ஸஸ் எல்எம் (Lexus LM) காருக்கு, இது விலை குறைவான மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








