காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமான மாதிரி நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் அனல் பறக்க விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அதிக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

அத்துடன் ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், போதிய அனுபவம் இல்லாத தொழிலதிபர் அனில் அம்பானியின் பாதுகாப்பு நிறுவனத்திற்கு இது நன்மை பயக்கும் எனவும் அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் பேசினார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ஆனால் இவை எதுவும் மக்கள் மத்தியில் எடுபட்டதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் உள்ள ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோயாவின் வீட்டிற்கு வெளியே ரபேல் போர் விமானத்தின் மாதிரி தற்போது நிறுவப்பட்டுள்ளது. மத்திய டெல்லி பகுதியில் உள்ள அக்பர் சாலையில்தான் ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோயா வசித்து வருகிறார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

இவரது வீட்டிற்கு நேர் எதிரேதான், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் கவனம் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ஆனால் பிஎஸ் தனோயாவின் வீட்டின் முன்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ரபேல் போர் விமான மாதிரி நிறுவப்பட்டு விட்டதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினாலும், ரபேல் இந்தியாவிற்கு தேவையான ஒன்றுதான்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

பிரான்ஸிடம் இருந்து மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், முதல் ரபேல் போர் விமானம் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

அத்துடன் வரும் 2022ம் ஆண்டிற்குள்ளாக 36 ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இந்த தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உறுதி செய்தார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ஏற்கனவே குறிப்பிட்டபடி, எதிரி நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றுதான். ரபேல் போர் விமானங்களை பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல், ட்வின்-ஜெட் போர் விமானம் ஆகும். ரபேல் போர் விமானத்தில், இரண்டு எம்88-2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. SNECMA நிறுவனம் ரபேல் விமானங்களுக்கான இன்ஜினை தயாரித்துள்ளது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ராணுவ போர் விமானங்களுக்கான இன்ஜின்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியிலான விமான இன்ஜின்களையும் இந்நிறுவனம் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து தயாரிக்கிறது. அத்துடன் ராக்கெட் இன்ஜின்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ரபேல் போர் விமானத்தின் நீளம் 15.30 மீட்டர். அகலம் 10.90 மீட்டர். உயரம் 5.30 மீட்டர். ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், ரபேல் போர் விமானம் 3,700 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும். எரிபொருள் தீர்ந்து விட்டால் தரையிறங்க தேவையில்லை.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

மற்றொரு விமானம் மூலமாக வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதியை ரபேல் போர் விமானம் பெற்றுள்ளது. ரபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2,130 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றவை.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

100 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள 40 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்டறியும் மல்டி-டைரக்ஸனல் ரேடார் ரபேல் போர் விமானத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் எதிரி நாடுகளின் ரேடார் கண்களில் மண்ணை தூவி விடும் ஆற்றலையும் ரபேல் போர் விமானம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

எதிரிகளின் ரேடார் சிக்னல்களை 'ஜாம்' செய்யும் திறனுடைய ஸ்பெக்ட்ரா என்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு உதவி அமைப்பு ரபேல் போர் விமானத்தில் வழங்கி விடும். எதிரி ஏவுகணைகள் அருகே நெருங்கினால் இது எச்சரிக்கை செய்யும்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

இவை அனைத்தையும் மீறி எதிரி ஏவுகணை, ரபேல் போர் விமானத்திற்கு மிக அருகே வந்து விட்டால், இது சிக்னல் அனுப்பும். பிரான்ஸ் விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவைகளின் பயன்பாட்டிற்காகவே ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு எதிரே ரபேல் போர் விமானம்... நாட்டின் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம் இதுதான்...

ஆனால் தற்போது இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய விமான படையை தவிர்த்து விட்டு பார்த்தால், எகிப்து விமான படை மற்றும் கத்தார் விமான படை ஆகிய அமைப்புகளும் ரபேல் போர் விமானங்களை பயன்படுத்துகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rafale Jet Replica Erected Outside IAF Chief's Home. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X