ஊர் உலகத்துக்கே பரிசுகளை அள்ளி கொடுப்பவர் இப்பதான் எல்வினுக்கு பரிசை கொடுத்திருக்காரா! தரமான பரிசா இருக்கே!
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வின்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் ஏழை மற்றும் எளியவர்களுக்கு வாகனங்களை பரிசாக வழங்கியதற்காக செய்திகளில் தலையங்கமாக மாறிய அவர், தற்போது தன்னுடைய தம்பிக்கு சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக காரை பரிசாக வழங்கியதனால் தற்போது மீண்டும் வைரலாகத் தொடங்கி இருக்கின்றார், நடிகர் ராகவா லாரன்ஸ். எல்வின் நடிப்பில், இனாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் த்ரில்லர் படம் 'புல்லட்'.
இந்த படத்தில் அவர் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை ராகவா லாரன்ஸ் எல்வின்க்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இதுவே எல்வின்-க்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தகுந்தது. ராகவா லாரன்ஸ், எல்வின்க்கு பரிசாக வழங்கி இருப்பது எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) ஆகும்.

இந்த கார் இந்தியாவில் 38.80 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலை உயர்ந்த காரையே தற்போது ராகவா லாரன்ஸ் பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த பரிசளிப்பு குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, "வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, இந்த சிறப்பு தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது சகோதரர் எல்வினின் முதல் திரைப்படமான புல்லட்டை நான் பார்த்தேன். அவருடைய நடிப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது பரிசு. அவரது நடிப்பால் என்னைப் பெருமைப்படுத்தியதற்காக அவருக்கும் ஒரு சிறப்பு முத்தம். எனது சகோதரருக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
குளோஸ்டர் காரில் அடாஸ் மற்றும் 4X4 டிரைவிங் தொழில்நுட்பம் போன்ற தரமான அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. தக்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே, இக்காரின் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்பங்கள் ஆகும். எம்ஜி குளோஸ்டர், 3 வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்குக் கிடைக்கும் முழு-அளவு எஸ்யூவி ரக காராகும்.
6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்பம், சொகுசு என இரண்டிலும் இந்த கார் மிக மிக சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. எனவேதான் முழு அளவு எஸ்யூவி கார் பிரிவில் இந்த காருக்கு கணிசமாக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை அந்த கார் பெற்றுக் கொண்டுள்ளது. சன்னி லியோன்,சோஹைல் கான், ஹேம மாலினி, ஷெர்லின் சோப்ரா, மசபா குப்தா, ஓம்கர் கபூர், சுஷ்மிதா சென், பலக் திவாரி, ஷாருக் கான், ரஸ்லான் மும்தாஜ், சத்திஷ் கவுசிக் என ஏகப்பட்டோர் எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி காரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் வரிசையிலேயே நடிகர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் எல்வின் தற்போது இணைந்து உள்ளார். அதேவேளையில், இந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமல்ல இன்னும் பல பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் இருவிதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இரண்டுமே டீசல் மோட்டார்கள் ஆகும். 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே குளோஸ்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், டர்போ மோட்டார் 161 எச்பி மற்றும் 375 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
ட்வின் டர்போ மோட்டாரானது 215 எச்பி பவரையும், 480 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இவ்விரு மோட்டார் தேர்வுகளுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. இதேபோல், சிறப்பு மற்றும் சொகுசு அம்சங்களிலும் இந்த கார் மிக சிறப்பான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. எனவேதான் இதற்கு பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபார்ச்சூனர் போன்ற பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே எம்ஜி இந்த காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் அதிக விலைக் காரணமாக பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக அது உள்ளது. இதனாலேயே விற்பனையில் சற்றே இந்த கார் பின் தங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








