லேசா பிரேக் போட்டதுக்கு ரோட்டுல இறக்கி சண்டை போட்டது இவ்வளவு பெரிய ஆளா? வைரலாகும் வீடியோ
நாம் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் உள்ள சக வாகன ஓட்டிகள் தவறாக வாகனம் ஒட்டியதால் நம் வாகனமும் சேர்த்து விபத்துக்குள்ளான சம்பவம் நம் வாழ்வில் ஒரு முறையாவது நமக்கு திகழ்ந்திருக்கும். இப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கியது ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாலையில் பணிக்கும்போது எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். அப்பொழுதுதான் நாம் பாதுகாப்பாக பயணம் செய்வது மட்டுமல்லாமல் சக வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஒரு வாகன ஓட்டி செய்யும் தவறால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிலர் செய்யும் தவறுகளால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தற்போது பெங்களூருவில் தான் வசித்து வருகிறார். அவரது சொந்த ஊர் பெங்களூர் தான். சமீபத்தில் அவர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது சிறிய விபத்தில் சிக்கினார். அப்பொழுது அவர், விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது ஹூண்டாய் கிரெட்டா காரின் முன்பே என்று மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. வீடியோவில் உள்ள ஆடியோ குவாலிட்டி குறைவாக இருப்பதால் அவர்கள் பேசுவது தெளிவாக புரியவில்லை. ஆனால் வீடியோவில் இருப்பது ராகுல் டிராவிட் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் இந்த வீடியோவில் ராகுல் டிராவிட் ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த சம்பவத்திற்கு தான் காரணம் இல்லை என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இது குறித்து நாம் விசாரித்த போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் பகுதியில் உள்ள கன்னிங்கம் சாலையில் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.
அப்பொழுது முன்னாள் ஒரு சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ சென்று கொண்டிருக்கிற பின்னால் ராகுல் டிராவிட் ஒட்டி வந்த ஹூண்டாய் கிரெட்டா கார் வந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது ஏதோ காரணத்திற்காக முன்னாஸ் என்ற சரக்கு ஆட்டோ உடனே திடீரென பிரேக் அடித்துள்ளார் வேகமாக சென்று கொண்டிருக்கும் டிராபிக் நடுவே திடீரென ஆட்டோ பிரேக் பிடித்ததை ராகுல் டிராவிட்டால் கணிக்க முடியவில்லை.
இதனால் இவர் உடனடியாக தனது காரை பிரேக் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் போதுமான அளவுக்கு நேரம் மற்றும் தூரம் இல்லாததால் இவரது காரின் முன் பகுதியில் லோடு ஆட்டோ பகுதியின் பின் பகுதி லேசாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது காரின் முன் பகுதியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது லோடு ஆட்டோ ஓட்டுனரும் காரை விட்டு இறங்கி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அங்கிருந்தவர்கள் யாரோ ராகுல் டிராவிட் தான் வாங்குவார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான விஷயம் சாலை விதிகளை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பது தான். அப்படி செய்தால் இப்படியான விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications









