ரகசியத்தை போட்டு உடைத்த ராகுல் காந்தி! அவர் சொன்ன விஷயத்தை கேட்டதும் எல்லாரும் அப்படியே ஒறஞ்சு போய்ட்டாங்க!

காங்கிரஸ் (Congress) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி (Rahul Gandhi), சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) சேனலில், வீடியோ (Video) ஒன்றை வெளியிட்டிருந்தார். அது டெல்லி பகுதியில் உள்ள பைக் மெக்கானிக்குகள் உடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் வீடியோ ஆகும்.

அவர்களிடம் பேசியபோது, பைக்குகளை எப்படி சர்வீஸ் செய்ய வேண்டும்? என்பதை ராகுல் காந்தி ஓரளவிற்கு கற்கு கொண்டார். இந்த உரையாடலின்போது, தன்னிடம் கேடிஎம் 390 (KTM 390) பைக் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியிடம் கேடிஎம் 390 பைக் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

KTM 390 Duke

எனினும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பொது வெளியில் அந்த பைக்கை ஓட்டுவதற்கு தனது பாதுகாவலர்கள் தன்னை அனுமதிப்பதில்லை எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்தியாவில் கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) என 2 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் எந்த பைக்கை ராகுல் காந்தி வைத்துள்ளார்? என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. இதில், கேடிஎம் 390 ட்யூக் பைக்கை எடுத்து கொண்டால், அது நேக்கட் ரகத்தை சேர்ந்தது ஆகும். 2.97 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கேடிஎம் 390 ட்யூக் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Rahul Gandhi KTM 390 Duke

இந்த பைக்கில், 373.27 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு டிஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 43 ஹெச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 37 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் கேடிஎம் ஆர்சி 390 பைக்கிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் இந்த இன்ஜின் 43 ஹெச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில்தான் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கானது, 3.18 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் கேடிஎம் ஆர்சி 390 என 2 பைக்குகளுமே மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. குறிப்பாக இந்த 2 பைக்குகளும் இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்களாக திகழ்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராகுல் காந்தியிடம் கேடிஎம் 390 பைக் இருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான விஷயமாகதான் இருக்கிறது. இந்த பைக்கில் மட்டும் ராகுல் காந்தி வலம் வந்தால், இளம்பெண்களின் 'நேஷனல் க்ரஷ்' ஆக மாறி விடுவார் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Article Published On: Monday, July 10, 2023, 23:52 [IST]
English summary
Rahul gandhi discloses owning ktm 390 here are all the details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+