ராகுலை பற்றிய இந்த விஷயம் அவரோட கட்சிகாரர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்ல! இப்போதான் அவரே சொல்லிருக்காரு!!

ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' எனும் பெயரில் நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்திய அரசியலில் புரட்சியை மேற்கொள்ளும் விதமாக குமரி தொடங்கி ஸ்ரீநகர் வரை இந்த நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அவர் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பிரபல யுட்யூப் சேனல் ஒன்றிற்கு அவர் சிறப்பு அளித்தார்.

இந்த பேட்டியின்போது தன் மனம் திறந்து ராகுல் காந்தி பல்வேறு தகவல்களை அவர் பரிமாறினார். குறிப்பாக, யாரும் எதிர்பார்த்திராத தகவல்கள் இந்த பேட்டியின் வாயிலாக வெளி வந்தன. திருமணம் குறித்து அந்த யுட்யூபர் கேள்வி எழுப்பியபோது அவர் தன்னுடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி மற்றும் தாய் சோனியா காந்தி ஆகிய இருவரின் குணாதிசயங்களைக் கலவையாகக் கொண்ட பெண் ஒருவர் கிடைத்தால் அவரை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தார்.

ராகுல்

இதுமட்டுமில்லைங்க, பிற அரசியல்வாதிகளிடம் இருந்து இவர் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றார். முக்கியமாக பிற அரசியல் வாதிகளைப் போல் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர வாகனங்களை பெரிதும் விரும்பாதவராக ராகுல் காந்தி இருக்கின்றார். பழைய ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களே அவரின் மனம் கவர்ந்த வாகனங்களாக இருக்கின்றன. குறிப்பாக, 4 ஸ்ட்ரோக் வாகனங்களைக் காட்டிலும் அவருக்கு டூ-ஸ்ட்ரோக் கொண்ட வாகனங்களே மிகவும் பிடிக்கும் என கூறினார். இவற்றின் மீது தீராத காதல் கொண்டிருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

தன்னுடைய பதின் பருவ காலத்தில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை ஓட்டி மகிழ்ந்ததாகவும், அவை தன்னுடைய நீங்க நினைவுகளில் இடம் பிடித்திருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார் ராகுல் காந்தி. மிகவும் அழகான ரெட்ரோ ஸ்டைலில், இயக்கவும் அந்த ஸ்கூட்டர் எளிதாக இருக்கும் மிகவும் பிரம்மிப்புடன் ராகுல் கூறினார். இத்துடன், இன்றைய கால ரசிகர்களைப் போல் தான் ஒரு ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ரசிகன் அல்ல என்பதையும் ஓபனாக தெரிவித்தார்.

ராகுல்

மேலும், தனக்கு டூ-ஸ்ட்ரோக் யமஹா ஆர்டி 350 பைக்கையே மிகவும் பிடிக்கும் என கூறினார். இந்தியாவில் பெரும்பாலான 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். ஏன் 2கே கிட்ஸ்கள் சிலரும் இந்த மோட்டார்சைக்கிளின் தீவிர ஃபேனாக இருக்கின்றனர். இதன் அதி-வேக திறன் வெளிப்பாட்டுக்கும், எக்சாஸ்டில் இருந்து வரும் சத்தத்திற்கும் இப்போதும் பலர் அடிமையாக உள்ளனர். அவர்களை போலவே காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதி ராகுல் காந்தியும் யமஹா ஆர்டி 350 பைக் லவ்வராக இருக்கின்றார்.

அதேவேளையில் இதன் சூப்பர் வேக திறன் அதிக ஆபத்தானது என்பதையும் ராகுல் காந்தி விளக்கினார். தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் அப்ரில்லா ஆர்எஸ் 250 டூ-ஸ்ட்ரோக் பைக்கை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஓராண்டு காலம் ராகுல் காந்தி ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். பாதுகாப்பு காரணமாக பின்னாளில் அமெரிக்காவிற்கு மாறினார். அதுவரை இந்த பைக்கே அவருடைய நெருங்கிய பயண நண்பனாக இருந்திருக்கின்றது.

ராகுல் காந்தி பற்றிய உண்மைகள் சில...

இருசக்கர வாகன காதல் பற்றி விளக்கிக் கொண்டிருந்த ராகுல் தன்னிடம் ஒரு கார்கூட சொந்தமாக இல்லை என்கிற ஆச்சரியமளிக்கும் தகவலையும் வெளியிட்டார். மேலும், தான் இதுவரை பயன்படுத்திய அனைத்து கார்களும் அரசால் தனக்கு வழங்கப்பட்டவை என்றும் அவர் கூறினார். மேலும், கார்களை தான் இதுவரை அதிகம் இயக்கியது இல்லை என்றும், அவர் கார் ஓட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கடைசியாக அவர் இயக்கிய கார் மாடல் ஹோண்டா சிஆர்-வி என்பதையும் அவர் கூறினார். இந்த கார் அவரது அம்மா சோனியா காந்திக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. டெல்லியில் நிலவும் மோசமான போக்குவரத்து நெரிசலே தான் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க காரணமாக இருப்பதாக ராகுல் கூறியுள்ளார். மேலும், இப்போதெல்லாம் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதைக் காட்டிலும் சைக்கிளை ஓட்டுவதே தனக்கு அதிகம் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், பாதுகாப்பு காரணமாகவும், பாதுகாப்பு பந்தோபஸ்து காரணமாகவும் தற்போது சைக்கிள் ஓட்டுவதுகூட கடினமான பொழுதுபோக்காக தனக்கு மாறியிருப்பதாக ராகுல் தெரிவித்திருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே வாகனங்களை தற்போது வரை ராகுல் காந்தி விலகியே வைத்து உள்ளார். இதன் விளைவாகவே அவரிடத்தில் பெரிய எண்ணிக்கையில் வாகனங்கள் இல்லாத நிலை தென்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2022, 18:52 [IST]
English summary
Rahul gandhi mentions he does not own car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+