மோடிக்கு முன்னால கால் மேல கால் போட்டு உக்காந்து பேச கூடியவர்! ஆனா கொஞ்சம் கூட பந்தா இல்லாம சாதாரண கார்ல போறாரு
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், விசாலமான கேபின், பிரீமியம் வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுக்காக பெயர் பெற்றது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 32.58 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக பார்த்தால், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் விலை உயர்ந்த ஒன்றுதான். ஆனால் செல்வாக்கு மிக்க பிரபலமான மனிதர்களை பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மிகவும் எளிமையான கார்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார்களை பயன்படுத்துவது கிடையாது.

ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் அரியாசனத்தில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை பயன்படுத்தியுள்ளார். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ராகுல் காந்தி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி கொண்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், பாதுகாவலர்கள் புடை சூழ நடந்து வரும் ராகுல் காந்தி, அதன் பின் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. அவர் பயன்படுத்தியது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் இஸட்எக்ஸ் ஹைப்ரிட் 7 சீட்டர் (ZX Hybrid 7 Seater) வேரியண்ட் ஆகும்.
இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 30.70 லட்ச ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 39 லட்ச ரூபாய் வரும். இந்த வேரியண்ட்டில், 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைப்ரிட் இன்ஜின் என்பதால், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக திகழ்கிறது.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் இஸட்எக்ஸ் ஹைப்ரிட் 7 சீட்டர் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவில் பெரிய ஒரு 7 சீட்டர் காருக்கு, இது சிறப்பான மைலேஜாக கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருந்து வருவதற்கு, இந்த சிறப்பான மைலேஜூம் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி பயணம் செய்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராகுல் காந்தி போன்ற நாட்டின் மிகவும் பிரபலமான மனிதர்கள் பயன்படுத்துவதால், வரும் காலங்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி ரக கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆகலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








