நட்ட நடு ராத்திரியில்... லாரியில் லிஃப்ட் கேட்டு சென்றது அவரா!! இவர் உண்மையிலேயே மாஸ் தாங்க!

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த போதிலும், மிக எளிமையாக, மக்களோடு மக்களாக உரையாட லாரி ஒன்றில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். லாரிக்குள் டிரைவருக்கு அருகாமையில் அமர்ந்து ராகுல் காந்தி அவர்கள் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் இருக்க தான் செய்கின்றன. அதேபோல் லாரி டிரைவர்களின் வாழ்வும் கஷ்டங்களையும், குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் துயரங்களையும் அடங்கியுள்ளது. நீண்ட தொலைவிற்கு லாரியை இயக்கும் டிரைவர்கள் வாரக்கணக்கில் கூட குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு பிரிந்து வேலை பார்க்கின்றனர். அத்துடன், நீண்ட தொலைவு பயணங்களினாலேயே அவ்வப்போது உடல் நல கோளாறுகளுக்கும் உள்ளாகுகின்றனர்.

rahul gandhi traveled in truck

அதிலிலும் குறிப்பாக, வயதான காலத்தில் லாரிகளை இயக்குவோரின் நிலைமை இன்னும் மோசமானது. ஆல் இந்தியா பர்மிட் லைசன்ஸை வைத்து கொண்டு நாடு முழுவதும் லாரிகளை இயக்குவோரின் அன்றாட வாழ்க்கை நிச்சயமாக காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மாலை 6 மணிக்கு முடிவதாக இருப்பதில்லை. லாரியை எப்போது இயக்க அனுமதி கிடைக்கவில்லையோ அப்போது உறக்கம், கிடைக்கும் இடத்தில் உணவருந்துவது என இப்படிதான் அவர்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

அத்தகைய மனிதர்களை சந்தித்து அவர்களது வாழ்விலையும், குறை, நிறைகளையும் கேட்டு அறிந்து கொள்வோம் என்ற முயற்சியிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து அம்பாலா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். ராகுல் காந்தின் தாயாரும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி அருணாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் தற்சமயம் உள்ளார்.

rahul gandhi traveled in truck

அவரை காண்பதற்காகவே ராகுல் காந்தி சிம்லாவை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். போகும் வழியில் ராகுல் காந்தி லிஃப்ட் கேட்டு சென்ற லாரி ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு மேலும் பல லாரி டிரைவர்களை ராகுல் காந்தியால் சந்திக்க முடிந்தது. அவர்களுடனும் கலந்துரையாடிய ராகுல் காந்தி பின்னர் அவர்களுள் ஒருவரது லாரிக்கு மாறி பயணம் செய்தார்.

இந்த நிகழ்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த டுவிட்டர் பதிவில், "ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட 90 இலட்ச டிரைவர்கள் இயங்குகின்றனர். அவர்களுக்கும் சொந்த பிரச்சனைகள் உள்ளன. அவர்களது மனதில் உள்ளதை ராகுல் காந்தி கேட்டறிந்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் "மனதில் உள்ளதை" என்ற வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடுவதாக உள்ளன.

rahul gandhi traveled in truck

ஏனெனில் பிரதமரின் 'மான் கி பாத்' நிகழ்ச்சியின் பெயருக்கு தமிழில் 'மனதில் உள்ளதை' என்று அர்த்தமாகும். இவ்வாறு, எந்தவொரு பாதுகாப்பும் இன்றி, மக்களுடன் மக்களாக கலந்து அவர்களுடன் கலந்துரையாடுவதை ராகுல் காந்தி மிகவும் விரும்பக்கூடியவர் என்பதை நாம் பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். இந்த மே மாத துவக்கத்தில் கூட பெங்களுர் மாநகர பேருந்தில் இவர் பயணம் செய்து இருந்தார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராகுல் காந்தி நினைத்திருந்தால், டெல்லியில் இருந்து சிம்லாவிற்கு சில நிமிடங்களில் விமானத்தில் சென்றிருக்கலாம். ஆனால் அந்த இருட்டிலும், ஓர் இரவு தூக்கம் போனால் கூட பரவாயில்லை, ஆனால் லாரி டிரைவர்களின் நிலைமையை அறிய வேண்டும் என்கிற மனது எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும். அதுசரி... பாரத் ஜோடோ யாத்ரா என்கிற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரையில் நடை பயணமாக சென்றவருக்கு ஓர் இரவு லாரி பயணம் எல்லாம் பெரிய விசயமே இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 19:20 [IST]
English summary
Rahul gandhi traveled in truck on highway by asking for lift
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X