ராகுல் காந்திக்கு கொஞ்சம் ஓவர் ஆசை தான்... 10 வருட பழைய காருக்கு இத்தனை லட்ச ரூபாயா?

ராகுல் காந்தி (Rahul Gandhi), இந்திய தேசிய காங்கிரஸ் (Congress) கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவர். தற்சமயம், இந்தியாவின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக விளங்கும் ராகுல் காந்திக்கு பின்னால் மிக பெரிய தொண்டர்கள் கூட்டம் உள்ளது. அதேபோல், ராகுல் காந்தியை சுற்றிலும் ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. இந்தியா போன்ற மிக பெரிய நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்றால் சும்மாவா... இதனாலேயே ராகுல் காந்தியை சுற்றிலும் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்க முடியும்.

அதேபோல், அவர் பயன்படுத்தும் வாகனங்களும் புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) செய்யப்பட்டவைகளாக உள்ளன. அவ்வாறு, புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட கார் ஒன்றை தற்போது விற்கும் முடிவிற்கு ராகுல் காந்தி வந்துள்ளார். இதுகுறித்த விபரங்கள் மற்றும் விற்பனைக்குவரும் காரின் படங்கள் அடங்கிய பதிவு ஒன்று இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ளது.

rahulgandhi used car on sale

அதன்படி பார்க்கும்போது, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2015இல் வாங்கப்பட்ட அவரது மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் (Mitsubishi Pajero Sport) காரை விற்க முன்வந்துள்ளார். டெல்லி நம்பர் பிளேட் (Delhi Number Plate)-ஐ கொண்ட இந்த காருக்கு சுமார் ரூ.23 லட்சம் செகண்ட்-ஹேண்ட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜினை கொண்ட காராக இருப்பினும், 10 வருடங்கள் பழமையான காருக்கு ரூ.23 லட்சம் என்பது அதிகமாகும்.

இதற்கு முக்கிய காரணம், இந்த மிட்சுபிஷி பஜேரோ கார் புல்லட்-ப்ரூஃப்-ஐ கொண்டிருப்பதினால் ஆகும். அதுமட்டுமின்றி, இந்த காரில் நல்ல தரத்திலான டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், காருக்கான கண்ணாடிகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இந்த காரை விற்கும் நிறுவனம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த பஜேரோ ஸ்போர்ட் காரில் 4x4 டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது கரடு, முரடான சாலைகளுக்கு காரை கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

rahulgandhi used car on sale

மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட இந்த காரை ராகுல் காந்தி மட்டுமே பயன்படுத்தி உள்ளார். அதாவது, அவர் மட்டுமே இந்த காருக்கு முதல் மற்றும் கடைசி ஓனர் ஆவார். 2015இல் இருந்து 1 லட்சத்து 18 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இந்த கார் இயக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரள வயநாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது ராகுல் காந்தி இந்த பஜேரோ ஸ்போர்ட் காரில் தான் அதிகமாக பயணித்தார்.

மிட்சுபிஷி பஜேரோ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், தற்போது இந்தியாவில் மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பாட்டில் இல்லை; அதன் பஜேரோ ஸ்போர்ட் காரும் விற்பனையில் இல்லை. இந்தியாவில் 2015ஆம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் கார் விற்பனையில் ஃபோர்டு எண்டேவியர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டது.

rahulgandhi used car on sale

இவற்றில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமே இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ளது. பஜேரோ ஸ்போர்ட் காரில் 2477சிசி, இன்லைன் 4-சிலிண்டர், 4 வால்வு/சிலிண்டர், DOHC டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 176 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜினை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம் என மிட்சுபிஷி நிறுவனம் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்கியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போதிய விற்பனை இல்லாததினால் மிட்சுபிஷி நம் நாட்டை விட்டு சென்றது என்றாலும், பஜேரோ கார்களுக்கு இப்போதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அத்தகைய கார் புல்லட்-ப்ரூஃப் உடன் நல்ல தரத்தில் செகண்ட்-ஹேண்டில் கிடைக்கிறது. இருப்பினும், புல்லட்-ப்ரூஃப் இல்லாமல் குறைந்த விலையில் இந்த காரை தருவதாக இருந்தால் தங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 31, 2024, 16:19 [IST]
English summary
Rahul gandhi used mitsubishi pajero sport car on sale asking price all details here
மேலும்... #used car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X