இரயில்வே நிர்வாகம் திறந்துள்ள ஓட்டலை பார்த்து ஆடிப்போன பயணிகள்!! இந்த ஐடியா எல்லாம் எப்படி வருதோ!

ஹைதராபாத்தின் பிரபலமான நெக்லஸ் சாலை இரயில் நிலையத்தில் இரயில் பெட்டி தோற்றத்தில் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த இரயில்வே உணவகம் குறித்த கூடுதல் விபரங்களையும், இந்த உணவகத்தின் முக்கிய சிறப்பம்சங்களையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரயில் நிலையங்களில் உணவகங்கள் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் சில இரயில்கள் பல மணிநேரங்களுக்கு ஒன்று தான் இருக்கும். அதேநேரம் சில இரயில்கள் தாமதமாக வருகை தரலாம். அதாவது, அத்தகைய இரயில்கள் எப்போது வரும் என்று துல்லியாக யூகிக்க முடியாது. அதுவரையில், நேரம் மற்றும் பசியை போக்க இரயில் நிலையத்திலேயே உணவகங்கள் இருக்க வேண்டும்.

rail coach restuarant in hyderabad

முக்கியமான இரயில் நிலையங்களில் உணவகங்கள் திறக்கப்படுவது இன்று, நேற்று அல்ல... நீண்ட காலமாகவே இருக்கும் ஒரு வழக்கம் ஆகும். இரயில் நிலைய உணவகங்களையும் பெரும்பாலும் கார்ப்பிரேட் நிறுவனங்கள் தான் கவனிக்கும். இதனால் கார்ப்பிரேட் நிறுவனங்களின் போட்டியில், சமீப காலமாக இரயில்வே உணவகங்கள் வெவ்வேறு விதமான ஸ்டைல்களில் திறக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இரயில் பெட்டி போன்றதான தோற்றத்தில் உணவகங்களை திறப்பது டிரெண்டில் உள்ளது. இந்த வகையில், ஹைதராபாத்தின் பரபரப்பான நெக்லஸ் புறநகர் இரயில் நிலையத்தில் 'இரயில் பெட்டி' வடிவில் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இவ்வாறான இரயில் பெட்டி வடிவ உணவகம் திறக்கப்படுவது இது 2வது முறையாகும்.

rail coach restuarant in hyderabad

சுற்றுலா தளங்கள் மூலம் தினந்தோறும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நெக்லஸ் சாலை இரயில் நிலையத்தில் இரயில் பயணிகளை மேலும் ஈர்க்கும் விதமாக இந்த உணவகம் இரயில் பெட்டி வடிவில் திறக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த உணவகம், சமையல் பிரியர்களையும் கவரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இரயில் பெட்டி வடிவிலான இந்த உணவகம் கட்டிடங்களை கட்டுவதுபோல், கல் & மணல் கொண்டு கட்டப்படவில்லை. உண்மையில், இந்த உணவகத்தின் கட்டமைப்புக்கு ஓர் பயன்படுத்தப்படாத இரயில் பெட்டி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், ஓர் உணவகத்திற்கு தேவையான சில மாற்றங்களை பெட்டியின் பாடியில் மேற்கொண்டுள்ளனர். அதேபோல், பெட்டியின் உட்புறத்திலும் உணவகத்திற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன.

rail coach restuarant in hyderabad

இவ்வாறு மாற்றப்பட்ட இரயில் பெட்டி, நெக்லஸ் சாலை இரயில் நிலையத்தில் இருந்த ஓர் காலியான பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. நெக்லஸ் இரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை நடத்தும் உரிமையை அடுத்த 5 வருடத்திற்கு பூமராங் உணவகம் பெற்றுள்ளது. இந்த இரயில்வே உணவகத்தில் இரயில் பயணிகள் மட்டுமின்றி, பொது மக்களும் உணவருந்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெக்லஸ் சாலை புறநகர் இரயில் நிலையம் ஆனது செகந்த்ராபாத் பிரிவில், தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது. இந்த மண்டலத்தின் ஜென்ரல் மேனேஜர் அருண் குமார் ஜெயின் இதுகுறித்து கூறுகையில், நெக்லஸ் சாலை இரயில் நிலையம் மற்றுமொரு தனித்துவமான உணவு சேவையை பெற்றுள்ளது. இந்த வசதியை இரயில்வே பயனர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பயன்படுத்தலாம் என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைதராபாத்தின் பரபரப்பான ஓர் நகரில் திறக்கப்பட்டுள்ளதால் இந்த உணவகத்தின் வணிகத்தில் தடுமாற்றம் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இவ்வாறான இரயில்வே உணவகங்களில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், அதிகப்படியான விலை ஆகும். சரியான நேரத்தில் இரயிலை பிடிக்க, இரயில் நிலையத்திற்குள் தான் பயணிகளால் உணவருந்த முடியும் என்பதை பயன்படுத்தி, உணவுகளின் விலைகளை அதிகமாக நிர்ணயிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 20:32 [IST]
English summary
Rail coach restaurant opened in hyderabad
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X