வந்தே பாரத் ரயிலில் இதை மட்டும் ட்ரை பண்ணாதீங்க! நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ!

ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழப் போனார், இதை முன்னரே சுதாரித்துக் கொண்ட ரயில்வே போலீசார் ஒருவர் இவரது உயிரை மயிரிழையில் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவில் துணிச்சலாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பாராட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. தினமும் இந்த ரயிலை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க இந்த வந்தே பாரத் ரயில் பயன்படுவதால் இந்த ரயில் பயணிக்க மக்கள் மத்தியில் அதிகமான ஆர்வம் இருக்கிறது.

vande bharat passenger slipped

இந்த பாரத் ரயில் எல்லாம் தானியங்கி கதவுகள் கொண்டதாக இருக்கிறது. அதாவது மெட்ரோ ரயில்கள் போல ரயில் கிளம்பும் முன்பே அதன் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். அதன் பின்பு ரயிலில் உள்ளே இருக்கும் யாரும் வெளியே போக முடியாது. வெளியே இருந்து யாரும் ரயிலுக்குள் ஏற முடியாத நிலை ஏற்படும். அதன் பின்பு தான் ரயில் பிளாட்பாரத்தில் இருந்து நகர துவங்கும் பலருக்கு இந்த விஷயம் புரியாமல் இருக்கிறது.

இப்படியாக பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயிலில் ஒருவர் ஓடி சென்று ஏற முயன்று தவறி கீழே விழுந்து போலீசாரின் உதவியால் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசாரே பாராட்டி வருகின்றனர்.

vande bharat passenger slipped

குறிப்பிட்ட இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்ததாகும் இந்த ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா-பூரி இடையேயான வந்தே பாரத் ரயில் சரியாக திட்டமிட்டபடி புறப்பட்டு சென்றது. அப்பொழுது தண்டவாளத்தில் இருந்து பயணி ஒருவர் ரயில் கிளம்பி செல்வதை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ரயிலில் ஏற வேண்டிய ஒரு பயணி ரயிலை இமைப்பொழுதில் தவற விட்டு விட்டார்.

வந்தே பாரத் இல்லாத ரயில்களில் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே சில பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் நாம் பார்த்திருக்க முடியும். இப்படியாக அவர் இந்த பாரத் ரயிலில் ஓடி சென்று ஏறிவிடலாம் என எண்ணி ரயிலை துரத்திக் கொண்டே ஓடுகிறார். இதை கவனித்த அங்கிருந்த ரயில்வே போலீசார் ஒருவரும் அவர் பின்னாலையே அவரை தடுப்பதற்காக ஓடுகிறார்.

vande bharat passenger slipped

ரயிலை தவற விட்ட பயணி ரயிலை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேராக ரயிலை நோக்கி ஓடி ரயிலில் மூடப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே நுழைய முயற்சிக்கிறார். ரயில் கதவு சாதாரணமாக தான் மூடப்பட்டு இருக்கும் என முதலில் அவர் கருதி கதவை திறக்க முயற்சித்த போது ரயில் சென்று கொண்டிருந்ததால் அவருக்கு பேலன்ஸ் தவறிவிட்டது. இதனால் அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள கேபில் சிக்கிக்கொண்டார்.

அப்பொழுது இவரை தடுப்பதற்காக பின்னாலே ஓடி வந்து கொண்டிருந்த ரயில்வே போலீசார் இதை சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரயில் தண்டவாளத்தில் விழ முயன்ற இவரை உடனடியாக பிளாட்பாரத்திற்கு இழுத்துப் போட்டார் இந்த காட்சிகள் எல்லாம் அப்பகுதியில் ரயில் கிளம்பி செல்வதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பயணி ஒருவரின் செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வந்தே பாரத் ரயில் கிளம்பிவிட்டது என்றால் ரயிலின் கதவுகள் ஆட்டோமேட்டிக்காக மூடப்பட்டு விட்டது என அர்த்தம். அதனால் கிளம்பி சென்று கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயிலில் ஏற முயற்சிக்க வேண்டாம் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். வந்தே பாரத் ரயில் குறித்து சரியான புரிதல் இல்லாத பலர் இப்படியாக ரயிலுக்கு வெளியே சிக்கிக் கொள்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக வந்தே பாரத் ரயிலை தவற விட்டு ரன்னிங்கில் ஏற முயன்று பலர் ரயில் ஏற முடியாமல் தவித்துள்ளனர். இது குறித்த ஏகப்பட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்த விழிப்புணர்வை ரயில் பயணங்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அவ்வப்போது வந்தே பாரத் ரயில் ஆட்டோமேட்டிக் கதவுகளை கொண்டதாக இருப்பதால் ரன்னிங்கில் ஏற முடியாது என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 11:10 [IST]
English summary
Railway cop rescues man who slipped while attempting to board a moving vande bharat train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X