சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயில் திட்டம்: மத்திய அரசு உறுதிப்படுத்தியது!

Written By:

மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. வரும் 2018ம் ஆண்டு புல்லட் ரயிலுக்கான கட்டமைப்புப் பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில், சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயில் திட்டம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து பாராளுமன்றத்தில் அதிமுக எம்பி ஜி.ஹரி கேள்வி எழுப்பினார்.

மேலும், மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் கட்டணம் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். இதுதொடர்பான விவாதத்திற்கு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், பல்வேறு புல்லட் ரயில் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

உறுதி

உறுதி

சென்னை- டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டம் இருப்பது உண்மைதான். இதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் நடந்து வருகின்றன.

ஆய்வுப் பணிகள்

ஆய்வுப் பணிகள்

சென்னை- டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்காக முதல் கட்டமாக டெல்லி- நாக்பூர் வழித்தடத்தில் விரைவில் ஆய்வுப் பணிகள் துவங்கப்பட உள்ளன என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியிருக்கிறார்.

சீன நிறுவனம்

சீன நிறுவனம்

சென்னை- டெல்லி இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த சீன நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஆய்வுகள் துவங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயண நேரம்

பயண நேரம்

சென்னை- டெல்லி இடையே புல்லட் ரயில் அமைக்கப்பட்டால், சென்னையிலிருந்து 9 மணி நேரத்திற்குள் டெல்லியை அடைந்துவிடலாம். இது தமிழகத்திற்கு மட்டுமின்றி, தென் மாநில மக்களுக்கும் சிறந்த திட்டமாக அமையும்.

மும்பை- ஆமதாபாத் திட்டம்

மும்பை- ஆமதாபாத் திட்டம்

மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பற்றிய சந்தேகங்களுக்கும் அவர் பதில் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காணலாம்.

 கட்டணம்

கட்டணம்

துரந்தோ ரயிலின் முதல் ஏசி வகுப்பு கட்டணத்தை விட, புல்லட் ரயிலில் ஒன்றரை மடங்கு கட்டணம் கூடுதலாக இருக்கும்.

எவ்வளவு?

எவ்வளவு?

மும்பை- ஆமதாபாத் இடையிலான 508 கிமீ தூரத்திற்கு ஏசி முதல் வகுப்பில் ரூ.2,200 கட்டணமாக இருக்கிறது. புல்லட் ரயிலில் ரூ.3,300 ஆக இருக்கும் என மனோஜ் சின்ஹா பதில் அளித்துள்ளார்.

குறைவு

குறைவு

இதே தூரத்திற்கு ஜப்பானில் இயக்கப்படும் புல்லட் ரயிலில் ரூ.8,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, உலகிலேயே இந்தியாவில்தான் புல்லட் ரயிலில் கட்டணம் மிக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்படும்.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

வரும் 2023ம் ஆண்டு புல்லட் ரயில் ஓடத் துவங்கும். அப்போது நாள் ஒன்றுக்கு 36,000 பேர் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2053ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,86,000 என்ற அளவில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயண நேரம்

பயண நேரம்

மும்பை- ஆமதாபாத் இடையிலான தூரத்தை புல்லட் ரயில் 2 மணி 7 நிமிடங்களில் கடக்கும். தற்போது துரந்தோ ரயிலில் 7 மணி நேரமாகிறது.

நிறுத்தங்கள்

நிறுத்தங்கள்

மும்பை, தானே, விரர், போய்சர், வபி, பிலிமோரா, சூரத் பாரூச், வதோதரா, அனந்த் மற்றும் ஆமதாபாத் ஆகிய இடங்களில் புல்லட் ரயில் நின்று செல்லும். இதில், தானே அருகே 30 கிமீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையில் புல்லட் ரயில் இயக்கப்படும்.

உலகின் டாப் 10 புல்லட் ரயில்கள்!

உலகின் டாப் 10 புல்லட் ரயில்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Railway Minister Confirms Delhi- Chennai Bullet Train Project.
Story first published: Friday, May 6, 2016, 9:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark