ஏழை, எளிய மக்களுக்கான புதிய இரயில்!! அமைச்சரே நேரில் வந்து எல்லாத்தையும் செக் பண்ணிருக்காரு... வேற லெவல்!

அம்ரித் பாரத் இரயிலை மத்திய இரயில்வே துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வந்தே சாதாரண் எனவும் அழைக்கப்படும் இந்த இரயில் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதியதாக வீடியோ ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள அம்ரித் பாரத் இரயிலையும், அதனுள் இடம்பெற்றுள்ள அம்சங்களை பற்றியும் காட்டியுள்ளனர். வீடியோவில், ஆரஞ்ச் நிறத்திலான அம்ரித் பாரத் இரயிலை காணலாம்.

railway minister inspected amrit bharat

வந்தே பாரத் இரயில்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாக அவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர் வெர்சன் தான் அம்ரித் பாரத் இரயில்கள் ஆகும். இந்த புதிய இரயில் சேவையை வருகிற டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கி வைக்கவுள்ளார்.

இதற்கிடையில்தான் தற்போது மத்திய இரயில்வே துறை அமைச்சர், அம்ரித் பாரத் இரயில் ஒன்றை நேரில் பார்வையிட்டுள்ளார். அம்ரித் பாரத் இரயிலின் டிரைவர் கேபினுக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், அதன்பின் பயணிகள் அமரும் பகுதி, கழிப்பறை மற்றும் மற்ற தொழிற்நுட்பங்களையும் ஆய்வு செய்தார்.

railway minister inspected amrit bharat

பின்னர் பேசிய அமைச்ச்சர், நீண்ட தொலைவு வழித்தடங்களில் அம்ரித் பாரத் இரயில்கள் அவற்றின் அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் மூலமாக குறைந்தது 2 மணிநேர பயணத்தை மிச்சப்படுத்தும் என தெரிவித்துள்ளார். அதாவது, அந்த அளவிற்கு இந்த இரயில்கள் அவற்றின் குறைவான எடையினால், அதிவேகமாக இயங்கக்கூடியவைகளாக இருக்கும்.

இரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், பயணிகளின் சவுகரியத்துக்காகவும் "புஷ்-புல்" தொழிற்நுட்பம் இந்த இரயிலில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அத்துடன், நிறைய புதிய வசதிகளும் அம்ரித் பாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்பது விபரமாக டிசம்பர் 30ஆம் தேதி தெரியவந்துவிடும்.

railway minister inspected amrit bharat

வந்தே பாரத் இரயில் உடன் ஒப்பிடுகையில், அம்ரித் இரயிலின் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மக்கள் குறைவான நீரை பயன்படுத்தும் விதமாக கழிப்பறையின் வடிவத்தை மாற்றியுள்ளனர். வந்தே பாரத் மற்றும் புதிய அம்ரித் பாரத் இரயில்களில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பங்கள் யாவும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

வருகிற டிசம்பர் 30ஆம் தேதி முதல் அம்ரித் பாரத் இரயில் சேவை உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்திக்கும், தர்பங்கா பகுதிக்கும் இடையே துவங்கப்பட உள்ளது. தொழிற்நுட்ப பிரச்சனைகள் ஏதேனும் ஏற்படுகின்றனவா என்பதை கண்டறிய முதல் 4- 5 மாதங்களுக்கு பொது ஓட்டங்களை மட்டுமே இரயில்வே மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

railway minister inspected amrit bharat

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் இரயிலுக்கு இணையாக அம்ரித் பாரத் இரயிலின் அறிமுகத்திலும் இரயில்வே துறை முனைப்புடன் இருப்பதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், ஏழை, எளியோர் மற்றும் மிடில்-கிளாஸ் மக்களுக்கான இரயிலாக அம்ரித் பாரத் விளங்கவுள்ளது. அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் குறைவானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 21:04 [IST]
English summary
Railway minister inspected amrit bharat train shared video check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X