இது ரயிலா இல்ல சொகுசு கப்பலா? படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரயில் இப்படி தான் இருக்கும்!
இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்ட கோச்சுகள் தயாராகி வரும் நிலையில், அதன் கான்செப்ட் புகைப்படத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு ரயில்களை எல்லாம் மிஞ்சும் வசதிகள் மற்றும் டிசைன் அம்சங்களுடன் இந்த ரயில் தயாராகி வருவது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்து வருகிறது என சொல்லலாம். இந்தியாவின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. இது மற்ற ரயில்களை விட அதிக வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் வெளிநாட்டில் உள்ள ரயில்களுக்கு இணையான சொல்லப்போனால் அதைவிட அதிகமான வசதிகளை கொண்ட ரயிலாக முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரயிலாக இது இருக்கிறது. தற்போது தமிழகத்தில் சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூர் விற்கும், சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், சென்னையில் இருந்து திருச்சி மதுரை வழியாக திருநெல்வேலிக்கும், சென்னையிலிருந்து ரேணிகுண்டா வழியாக விஜயவாடாவிற்கும் தினமும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே பகல் நேர வந்தே பாரத் ரயில்களை மட்டுமே தயாரித்து வருகிறது. இதுவரை வெறும் 75 பகல் நேர வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மட்டுமே ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான கட்டமைப்பு பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. படுக்கை வசதி கொண்ட வந்து பாரத் ரயில்கள் வெளிப்புறம் இதே மாதிரி தான் இருந்தாலும் உட்புறத்தில் முழுமையாக மாற்றம் செய்யப்பட வேண்டியது இருப்பதால் அதற்கு சற்று அதிக கால தாமதம் ஆகிறது.
இந்நிலையில் இந்திய ரயில்வே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் வெர்ஷனை உருவாக்கியுள்ளது. இதன் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பகிர்ந்து வெளிநாட்டு ரயிலில் அம்சங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

இந்த புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ரயில் பெட்டி மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிப்பதில் அனுபவம் உள்ள பிஇஎல்எம் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது என்றும் மேலும் சில பெட்டிகள் மேற்கு வங்கத்திலும் தயார் ஆகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் வரும் 2024-ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 400 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக 2023-24ம் நிதியாண்டில் சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த ரயில் பெட்டிகள் எல்லாம் தயாராகி படுத்தி வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாராகும் என தெரிகிறது.
2024 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் படுக்கை வசதிகளுடன் அறிமுகமானால் அது நீண்ட தூர பயண ரூட்களில் மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லி சென்னையில் இருந்து மும்பை போன்ற நீண்ட தூர பயணத்திற்காக இந்த ரயில் பயன்படுத்தப்படலாம் இரவு நேர ரயில் என்பதால் நிச்சயம் இரவு நேரத்தில் பயணம் இருக்கும் வகையில் தான் இது திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே பகல் நேர வந்தே பாரத் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. நிலையில் தற்போது படுக்கை வசதிகளுடன் கூடிய இரவு நேர வந்தே பாரத் ரயில் அறிமுகமானால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். மக்கள் பலர் இந்த ரயிலை பயன்படுத்த துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்வேக்கும் வருமானம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications
