ரயிலில் பயணத்தில் வாட்ஸ் அப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யலாம்! சீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்!
ஐஆர்சிடிசி இணையதளம் இந்தியா முழுவதும் ரயில் பயணிகள் வாட்ஸ் அப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்திய மக்களிடம் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து டெலிவரி பெற்று சாப்பிடம் பழக்கம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் லைன் டெலிவரி ஆப்கள் பிரபலமடைந்துவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் ரயில்களில் பயணிக்கும் போது தற்போது ஆன்லைன் மூலம் உணவுகளைப் பெற ஐஆர்சிடிசி புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ஐஆர்சிடிசி பிரத்தியேக ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் ஒருவர் தனது டிக்கெட்டில் பிஎன்ஆர் நம்பரை பதிவு செய்து அடுத்து வரும் ஸ்டேஷன்களில் அருகே உள்ள ரெஸ்டாரெண்ட்களிலிருந்து உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நேரடியாக அவர் அமர்ந்திருக்கும் சீட்டிற்கே பெற முடியும். இந்த சேவை ஏற்கனவே அமலில் இருக்கிறது.
இந்த முறையில் உணவுகளை முன்பதிவு செய்ய https://www.ecatering.irctc.co.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு டிக்கெட்டின் பிஎன்ஆர் நம்பர் அல்லது ரயிலின் நம்பர் மற்றும் சீட் ஆகியவற்றைப் பதிவு செய்து உணவுகளை ஆர்டர் செய்யலாம். இந்நிலையில் ஐஆர்சிடிசி தளம் தற்போது இந்த கேட்டரிங் சர்வீஸில் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் தங்கள் வாட்ஸ் அப் மூலமே உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் அளித்த அறிக்கையில் இரண்டு விதமான வாட்ஸ் அப் புக்கிங் சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த சேவைகளை வழங்குவதற்காக +91-8750001323 என்ற பிஸ்னஸ் வாட்ஸ் அப் நம்பரை இதற்காகப் பிரத்தியேகமாக வைத்துள்ளது.
இதன் மூலம் முதன் முறையில் ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் உணவுகளை புக்கிங் செய்யும் வெப்சைட்டின் லிங்குகளை அனுப்பும் பயணிகள் அந்த லிங்கை கிளிக் செய்து அந்த உணவின் ஆர்டரை பெற முடியும். இது வழக்கமாக வெப்சைட்டில் உணவுகளை ஆர்டர் செய்வது போல தான் செயல்படும். ஆனால் இந்த முறையில் பலருக்குச் சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகிறது.
இதற்காக இரண்டாவதாக ஒரு முறை அமல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வாட்ஸ்
அப் உடன் செயற்கை நுண்ணறிவு சேட் பாட் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நேரடியாகவே வாட்ஸ் அப்பில் எந்த ஸ்டேஷனில் உணவு வேண்டும். அங்குச் சேவை வழங்கும் ரெஸ்டாரென்ட் என்னென்ன? அங்கு எந்த உணவு எவ்வளவு அளவில் வேண்டும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வாட்ஸ் அப்பிலேயே செய்ய முடியும் அதற்கான பேமெண்டையும் வாட்ஸ் அப்பிலேயே பெற முடியும்.
ஆனால் இரண்டாவதாக உள்ள சேட் பாட் முறை தற்போது குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே முயற்சி திட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் இது மற்ற ஸ்டேஷன்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் இப்படியாக ஆன்லைன் மூலம் ரயில்வே ஸ்டேஷனிற்கு வெளியில் உள்ள கடையிலிருந்து உணவு பெறும் சேவையை அறிமுகப்படுத்தியது பெறும் வெற்றி பெற்றுள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் உள்ளே உள்ள கேண்டீன்களில் உணவு பிடிக்காதவர்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் முன்னர் வரை வேறு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. தற்போது பயணத்தின் போது அந்த ஊர் ஸ்பெஷல் உணவு முதல் பயணிகள் விரும்பிய உணவு வரை சாப்பிட முடியும் என்பதால் மக்கள் அதிகம் இதை விரும்பி வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் இந்த ஐஆர்சிடிசி ஆன்லைன் கேட்ரிங் சேவை வழியாகத் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுகள் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த சேவை குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








