ரயில்வே டிக்கெட்டில் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? மாற்றாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும்?
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தால் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற என்ன செய்யவேண்டும்? அப்படி மாற்றாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும்? இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம். சிலர் அடிக்கடி ரயில் பயணம் செய்வார்கள். ரயிலில் பயணிப்பது என்பது மிகவும் சுகமான அனுபவம் தான் மற்ற சாலை போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் பயண களைப்பு என்பது மிகவும் குறைவு. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணிப்பதை விரும்புவார்கள்.

ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட்டுப் பயணித்தால் படுத்துத் தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம். இந்நிலையில் பலருக்கு நாம் புக் செய்த ரயிலில் நாம் ஏற வேண்டிய ஸ்டேஷனில் ஏறாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது எதைத் தெளிவுபடுத்தவே இந்த பதிவை நாங்கள் மேற்கொள்கிறோம்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் போர்டிங் செய்யும் ரயில் நிலையத்தை மாற்ற ரயில்வே நிர்வாகமே வசதியைச் செய்து கொடுத்துள்ளது. அதன்படி நீங்கள் ஒரு ரயிலில் செல்ல முன்பதிவு செய்துவிட்டீர்கள் ஆனால் அதன் பிறகு நீங்கள் ரயிலில் ஏறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் புக் செய்த இடத்திற்கு அடுத்து ரயில்கள் நிற்கும் ஸ்டேஷன்களில் டிக்கெட்டை புக் செய்யலாம்.

ஆனால் நீங்கள் ஏற்கனவே புக் செய்த ஸ்டேஷனிற்கு முந்தைய ஸ்டேஷன்களுக்கு நீங்கள் டிக்கெட்டை மாற்ற முடியும். இதுவும் ஆன்லைனில் டிக்கெட் பெற்றிருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அதுவும் ஒரு டிக்கெட்டிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். அதுவும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை தான் இந்த டிக்கெட்டை மாற்ற முடியும்.

இதற்கான ஆப்ஷனை ஐஆர்சிடிசி தளத்தில் இருக்கிறது. அதில் நீங்கள் லாக்கின் செய்தவுடன் டிக்கெட் புக் செய்த ஹிஸ்டரிக்குள் உள்ளே சென்று போர்டிங் பாயிண்டை மாற்றும் ஆப்ஷன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு தான் இதைச் செய்ய முடியும் அதற்குப் பிறகு செய்ய முடியாது. இதுதான் தற்போது ரயில்வேயில் பின்பற்றப்படும் விதிமுறை. ஒரு வேளை நீங்கள் புக் செய்த ரயிலில் போர்டிங் ஸ்டேஷனில் ஏறவில்லை என்றால் என்ன நடக்கும்? பலருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது.

பொதுவாக நீங்கள் ரயிலில் ஏறியதும், நீங்கள் ஏறிவிட்டீர்களா என உறுதி செய்வதற்கு டிக்கெட் பரிசோதகர் ரயில் இருப்பார். அவரிடம் எந்தெந்த பயணிகள் எந்தெந்த சீட்டிற்கு எந்தெந்த ஸ்டேஷனிலிருந்து டிக்கெட் புக் செய்திருக்கிறார்கள் என் பட்டியல் இருக்கும். அதன்படி அவர் குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய பின்பு அந்த சீட்டிற்கு வந்து பயணியின் டிக்கெட்டை சோதனை செய்வார்.

அந்த இடத்தில் அந்த பயணி இல்லை என்றால் அடுத்த ரயில் நிலையங்களில் பயணி ஏற வாய்ப்பு இருக்கிறது. என்பதால் ரயில் அடுத்த 2 நிறுத்தங்களில் நிற்கும் வரையோ அல்லது ரயில் புறப்பட்ட இடத்திலிருந்து 1 மணி நேரம் வரையோ காத்திருப்பார். அப்படியும் அந்த பயணி வரவில்லை என்றால் அதைக் காத்திருப்பு பட்டியலில் உள்ள வேறு யாருக்காவது வழங்கிவிடுவார்.

உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்ல டிக்கெட் புக் செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒருவேளை சென்னை தாம்பரம் அருகிலோ அல்லது செங்கல்பட்டு அருகிலோ இருந்தால் அந்த ஸ்டேஷனிற்கு ரயில் வரும் வரை டிடி ஆர் காத்திருப்பார். இதற்காக நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை நீங்கள் விழுப்புரத்தில் ஏற முடிவு செய்தால் நீங்கள் சென்னை எழும்பூரில் புக் செய்த டிக்கெட் அதற்குள் வேறு பயணிக்கு மாற்றிக்கொடுத்திருக்க நேரிடும். அதனால் நீங்கள் விழுப்புரத்தில் ஏற வேண்டும் என்றால் போர்டிங் ஸ்டேஷனை டிக்கெட்டில் மாற்ற வேண்டும்.

ஒரு முறை நீங்கள் போர்டிங் செய்ததை உறுதி செய்துவிட்டால் போதுமானது. பயணம் முழுவதும் மீண்டும் மீண்டும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் இறங்கும் இடம் என்பது நீங்கள் எந்த இடம் வரை புக் செய்துள்ளீர்களே அதுவரை இறங்கிக் கொள்ளலாம். ஏன் அதற்கு முந்தைய ரயில் நிலையங்களில் கூட நீங்கள் இறங்கிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் புக் செய்த ஸ்டேஷன் தாண்டி செல்ல அனுமதி கிடையாது.

சில நேரம் நீங்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன் வரை புக் செய்துள்ளீர்கள் ஆனால் திடீரென பயணத் திட்டத்தை மாற்றி அடுத்தஸ்டேஷன் அல்லது அதற்கு அடுத்த ஸ்டேஷன் வரை செல்ல வேண்டும் என நீங்கள் நினைத்தால் உடனடியாக டிடிஆரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர் நீங்கள் டிக்கெட் எடுத்த ஸ்டேஷனிலிருந்து நீங்கள் இறங்க நினைக்கும் ஸ்டேஷன் வரை சீட் எதுவும் காலியாக இருக்கிறதா எனச் சோதனை செய்வார்.

அப்படியாக சீட் காலியாக இருந்தால் அந்த சீட்டிற்கான பணத்தை நீங்கள் டிடிஆரிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதைப் பெற்றுக்கொண்டு உங்கள் பயணத்தைக் குறிப்பிட்ட ஸ்டேஷன் வரை எக்ஸ்டண்ட் செய்யலாம். ஆனால் சீட் எதுவும் காலியாக இல்லை என்றால் வேறு வழியில்லை நீங்கள் புக் செய்தடிக்கெட்டில் உள்ள ஸ்டேஷனிலேயே நீங்கள் இறங்கி ஆக வேண்டும்.

டிடிஆரிடம் நீங்கள் டிக்கெட்டை எக்ஸ்டண்ட் செய்யாமல் பழைய டிக்கெட்டிலேயே நீங்கள் பயணித்தால் உங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவராகக் கருதப்பட்டு அதற்கான அபராதம் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். அதனால் அடுத்த முறை நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ஏறும் ஸ்டேஷன் மற்றும் இறங்கும் ஸ்டேஷனில் கவனமாக இருங்கள் இந்த தகவல் உங்கள் உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மேலும் இது குறித்த சந்தேகம் இருந்தால் கமெண்டில் கேளுங்கள்.


Click it and Unblock the Notifications