ரயில் டிக்கெட்டில் பெயர், தேதி மாற்றம் செய்யலாமா? இப்படி ஒரு வழி இருக்குறதே யாருக்கும் தெரியாது!

ரயிலில் புக் செய்து விட்டால் அதில் பயணிகள் பெயரையோ பயண தேதியையோ மாற்ற முடியாது என பலர் யோசித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் ரயில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு இப்படியாக பயன டிக்கெட்டில் இருக்கும் பயணிகளின் பெயரை மாற்றவோ அல்லது பயண தேதியை மாற்றவோ வழி இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் இதற்கான வழிகளை ஏற்கனவே செய்து வைத்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படியான ஒரு சம்பவம் இருக்கிறது இது குறித்த விரிவான விபரத்தை பார்ப்போம்.

இந்தியாவில் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் பலர் ரயில் பயணத்தைத் தான் தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம்தான் சொகுசான அதேநேரம் விரைவான பயணத்தை நமக்கு தருகிறது என்பதால் மக்கள் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்பி வருகிறார்கள். இதனால் இந்தியாவில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினம் தரும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

railway ticket name date change

பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் பலர் முன்பதிவுகளை செய்துதான் டயல் செய்து வருகிறார்கள். முன்பதிவு செய்தால்தான் நமக்கு போதுமான சொகுசான வசதியுடன் ரயிலில் பயணம் செய்ய முடியும். தற்போது ஆன்லைன் மூலமும் நேரடியாக ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் ஒருவர் பயணம் செய்ய முடியாமல் போனால் அந்த டிக்கெட் வீணாக தான் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பயண தேதிக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பயணம் ரத்து செய்வது குறித்து ஒருவர் தெரிந்து கொண்டால் அவர் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளலாம். ஆனால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் போனால் அவருக்கு பிரச்சனை தான் ஏற்படும். பலர் இந்த மாதிரியான நேரங்களில் ரயில் டிக்கெட் பயணம் செய்யாமல் வீணடித்து விடுகிறார்கள். ஆனால் ரயில் டிக்கெட் பெயரை மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

railway ticket name date change

ரயில்வே நிர்வாகம் ரயில்வே டிக்கெட் ஒருத்தர் பெயரில் எடுக்கப்பட்டால் அவர் அந்த பெயரை ஒருமுறை மட்டுமே மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை நீங்கள் ஆன்லைனில் எடுக்காமல் நேரடியாக ரயில்வே ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுண்டரில் எடுத்திருக்க வேண்டும். அப்படியாக மாற்றுவதற்கு உரிய காரணமும் அதே நேரம் மாற்றும் நபர் டிக்கெட் எடுத்த நபருக்கு ரத்த சொந்தமாகவும் இருக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது.

இதை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஒரிஜினலாக புக் செய்த ரயில் டிக்கெட் உடன் முதலில் யார் பெயரில் ரயில் டிக்கெட் புக் செய்யப்பட்டதோ அவர்கள் மற்றும் அவர்கள் அவர்களது அரசு ஆவணம் மற்றும் யார் பெயரில் மாற்ற வேண்டுமோ அவரது அரசு ஆவணத்துடன் சென்று ஒரு விண்ணப்பம் எழுதி ரயில்வே புக்கிங் அதிகாரியிடம் தர வேண்டும் இதை ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக செய்ய வேண்டும் செய்தால் ரயில் டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

இதுவே குரூப்பாக டிக்கெட் புக் செய்யும் போதும் பெயர் மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். குரூப்பாக டிக்கெட் புக் செய்வது என்றால் பள்ளி மூலம் டூர் செல்வது அல்லது ஒரு அலுவலகத்தில் இருந்து மொத்தமாக டிக்கெட்டை புக் செய்வது போன்ற தருணங்களில் ரூட் டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.

அதேபோல ரயில்வே டிக்கெட்டில் பயண தேதியை மாற்றுவதற்கு வழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் நேரடியாக ரயில்வே டிக்கெட் கவுண்டரில் எடுக்கப்பட்ட டிக்கெட் தான் செல்லுபடியாகும். நீங்கள் பயண தேதியை மாற்றும் கோரிக்கையுடன் உரிய ஆவணங்களுடன் புக்கிங் அதிகாரியை சென்று சந்திக்க வேண்டும். கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் ஆர்எசி டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பயண தேதியை மாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது. அதே நேரம் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யப்பட்டு கன்ஃபார்ம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த பயண தேதியை மாற்ற முடியாது.

இப்படியாக ரயில்களில் டிக்கெட் புக் செய்து விட்டால் அதில் பெயரை மாற்றவோ தேதியை மாற்றவும் முடியாது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக பெயரையும் தேதியையும் மாற்ற வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டியது இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட் புக் செய்தால் அதில் இந்த மாற்றங்களை எல்லாம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்றும் வாய்ப்பை ஆன்லைனில் வழங்கி விட்டால் போலியான ரயில் டிக்கெட் விலை விற்பனை செய்யும் வாய்ப்பு அதிகரித்து விடும் என்ற காரணத்திற்காக இதை ஆன்லைனில் வழங்காமல் இருக்கிறார்கள். தேதியை மாற்றுவதிலும் பல்வேறு விதமான சிக்கல்கள் இருப்பதன் காரணமாக இதை ஆன்லைன் மூலம் செய்ய ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. எதிர்காலத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 28, 2024, 10:59 [IST]
English summary
Railway ticket name date change no cancellation required
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+