தண்டவாளம் பக்கத்தில் இந்த சிக்னல்களை கண்டால் உடனே உஷாராகிடுங்க!! இரயில் ஓட்டுனர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்

இந்தியாவின் போக்குவரத்தில் இரயில்வே ஆனது மிக முக்கியமான முதுகெலும்பாக விளங்குகிறது. ஏனெனில், விமான போக்குவரத்தை பயன்படுத்தும் அளவிற்கு நம் நாட்டில் நிறைய பேரது பொருளாதார நிலைமை இல்லை. தினந்தோறும் இலட்சக்கணக்கிலான மக்கள் இரயில்களை பயன்படுத்துகின்றனர். சென்னை - டெல்லி போன்ற தொலைத்தூர பயணங்களுக்கு கூட இரயில்களை பயன்படுத்துவோர் இப்போதும் நம் நாட்டில் நிறைய பேர் உள்ளனர். இருப்பினும், இரயில்களிலும், இரயில் நிலையங்களிலும் குறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளின் அர்த்தங்கள் பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக, இரயில் தண்டவாளங்களில் இருக்கும் பலகைகளில் குறிக்கப்பட்டிருக்கும் 'C/F' மற்றும் 'W/L' குறியீடுகள் இரயில்வேயில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அந்த 'C/F' மற்றும் 'W/L' குறியீடுகளை பற்றிதான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம். இந்த குறியீடுகள் இந்திய இரயில்வே துறையில் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. குறிப்பாக, இரயில்கள், அதனுள் இருக்கும் பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பில் இவை மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

c f and w l signals detail

தண்டவாளங்களின் தன்மையையும், பயண சூழலையும் இரயில் ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கக் கூடியவைகளாக இந்த குறியீடுகள் விளங்குகின்றன. இதன் காரணமாக, இந்த குறியீடுகளை தாங்கிய போர்ட்கள் தண்டவாளத்திற்கு அருகாமையில் அமைக்கப்படுகின்றன. 'C/F' என்பது ஹார்ன் சத்தத்தை எழுப்ப வேண்டும் என்பதை இரயில் ஓட்டுனருக்கு தெரிவிக்கும் சிக்னல் ஆகும்.

அதாவது, மக்கள் குடியிருப்பு பகுதிகள் நெருக்கமாக வர போகிறது, ஆதலால் ஹார்ன் சத்தத்தை எழுப்பவும் என்பதை இரயில் ஓட்டுனருக்கு இந்த சிக்னல் உணர்த்துகிறது. அதுவே, 'W/L' ஆனது ஹார்ன் சத்ததை எழுப்புவதுடன், அடுத்ததாக லெவல் கிராஸிங் வர போகிறது ஆதலால் வாகனங்கள் மற்றும் மக்களின் குறுக்கீடை உணர்ந்து செயலாற்றவும் என்பதை இரயில் ஓட்டுனருக்கு தெரிவிக்கிறது.

c f and w l signals detail

ஆக மொத்தத்தில் இந்த இரு சிக்னல்களும் இரயில் ஓட்டுனருக்கு மட்டுமே ஆகும். மேலும், இந்த சிக்னல்களை தண்டவாளத்திற்கு அருகே கண்டால் இரயில் ஓட்டுனர் நிச்சயமாக ஹார்ன் சத்தத்தை எழுப்புவார் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால், தண்டவாளத்திற்கு அருகே இந்த குறியீடுகளை கொண்ட பலகைகளை கண்டால், காதை கிழிக்கும் இரயில் ஹார்ன் சத்தம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும், இந்த சிக்னலை கொண்ட பலகைக்கு அருகே கட்டடம் கட்டுபவர்கள் ஒருமுறைக்கு பலமுறை இரயில் ஹார்ன் சத்தம் குறித்து யோசித்துக் கொள்ளவும். பொதுவாக, இந்த 'C/F' மற்றும் 'W/L' குறியீடுகளை கொண்ட பலகைகள் இரயில் ஓட்டுனர் தொலைத்தூரத்தில் இருந்து பார்த்தாலும் எளிதாக அடையாளம் காணும் வகையில் நன்கு பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் வழங்கப்படுவது வழக்கம்.

c f and w l signals detail

ஏனெனில், அப்போதுதான் இரயில் ஓட்டுனர் மட்டுமின்றி என்ஜின் பெட்டியில் பணியாற்றும் மற்ற பணியாளர்களும் இதற்கு முன்னெச்சரிக்கையாக எல்லாவற்றிற்கும் தயாராக முடியும். நீங்கள் அடுத்ததாக இரயிலில் பயணம் செய்யும்போது இத்தகைய பலகை வருகின்றனவா என்பதை ஜாலியாக கவனித்து பாருங்கள். பெரும்பாலும், இந்த குறியீட்டு பலகைகளை இரயில்களுக்கு அருகேயும், தண்டவாளத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பரவலாக காண முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'C/F' மற்றும் 'W/L' ஆனது வெறும் சிக்னல்கள் மட்டுமில்லை. இவை மக்களின் உயிரையும், இரயிலையும் விபத்தில் இருந்து பாதுகாக்கும் ஸ்லீப்பர் செல்கள் ஆகும். இந்த பலகைகளை நம் வாழ்நாளில் தினந்தோறும் கடந்து சென்றிருப்போம். ஆனால், அவற்றின் அர்த்தங்கள் என்ன என்பது நமக்கு தெரியாது, அவற்றை தெரிந்துக் கொள்ளவும் முயற்சித்திருக்க மாட்டோம். ஆக, இன்று நாம் புதியதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துக் கொண்டுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 14, 2024, 21:28 [IST]
English summary
Railway tracks cf and wl signals detail check all details here
மேலும்... #indian railways #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X