இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!

ரயில்களில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய இனி புகார் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதற்காக தானியங்கி தொழில்நுட்பம் ஒன்றை அனைத்து ரயில் பெட்டிகளிலும் செட் செய்ய உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது என்ன தொழில்நுட்பம் இது எப்படி வேலை செய்கிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று பொது போக்குவரத்தாக பஸ் விமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தாலும் மக்கள் பல ரயில்களையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். இதற்கு சொகுசான பயணமும் குறைந்த விலையில் பயணமும் கிடைப்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் வயதானவர்கள் அடிக்கடி கழிவறையை பயன்படுத்த ஏற்றதாக இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள்.

railways toilet iot based sensor

இப்படியாக ரயில்களில் அடிக்கடி பயணம் செய்யும் பலர் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால் ரயிலில் உள்ள கழிவறை சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் பல பிரபலமான ரயில்களில் ரயில் கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. ஆனால் சில ரயில்களில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் மிக மோசமான நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

இப்படியான சுத்தம் செய்யப்படாத கழிவறையில் இருந்து துர்நாற்றம் பேசுகிறது. இதனால் ரயில் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலை ஏற்பட்டால் ரயில் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ரயில் பெட்டியில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளிக்கப்படுகிறது. இப்படியாக புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

railways toilet iot based sensor

இப்படியாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது அனைத்து நேரங்களிலும் சாத்தியமில்லை. இதனால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் யோசித்தது அதற்காக தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளிலும் ஐஓடி அடிப்படையிலான தொழில்நுட்ப ஒன்றை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மும்பையை சேர்ந்த வில்லிசோ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை அணுகி உள்ளது. இந்த நிறுவனமும் தற்போது இதற்கான ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் ரயில் பெட்டியில் உள்ள கழிவறையில் சென்சார் ஒன்றை பொருத்துகிறது. இந்த சென்சார் எப்பொழுதும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறையில் உள்ள காற்றை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

railways toilet iot based sensor

காற்று துர்நாற்றம் அதிகமாகும் போது தானியங்கியாக உரிய நபர்களுக்கு அலார்ட் செய்யும் இதையடுத்து ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து அதன் அருகே உள்ள துப்புரவு பணியாளர்கள் செல்போனிற்கு இந்த அலாட் செல்லும் அவர்கள் ரயில் எந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வரும் என்பதை அறிந்து அந்த இடத்திற்கு நேரடியாக சென்று உடனடியாக கழிவறையை சுத்தம் செய்து விடுவார்கள்.

இதனால் ஒவ்வொரு முறையும் ரயில் பயணம் செய்யும் பயணிகள் புகாரை செய்து தான் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரயில் கழிவறை ஒரு இடத்தில் சுத்தம் செய்ய மறந்து துர்நாற்றம் அதிகமானால் தானியங்கியாக அலர்ட் கொடுக்கப்பட்டு அதன் மூலமாக நேரடியாக ஊழியர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் கழிவறையை சுத்தம் செய்ய வந்து விடுவார்கள்.

தொழில்நுட்பத்தை தற்போது ரயில்வே நிர்வாகம் எப்படி பயன்படுத்த போகிறது என்ற விபரம் தெரியவில்லை. முதலில் இதை சோதனை கட்டமாக பயன்படுத்தி பின்னர் இது வெற்றி பெறும் பட்சத்தில் அனைத்து ரயில்களிலும் இதை கொண்டு வர முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. அதன்படி இந்த அப்டேட்டும் மிக முக்கியமான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இந்த சென்சார் முறையில் கழிவறை துர்நாற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்பட்டால் நிச்சயம் இது இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 15, 2024, 13:02 [IST]
English summary
Railways toilet iot based sensor solution addressing biggest challenge
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X