அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

Written By:

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

அதிக சொகுசு மற்றும் மிக சுகாதாரமான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

'சுவர்ணா' என்ற திட்டத்தின் கீழ் 4 ராஜ்தானி எக்ஸ்பிரஸ்களும், 15 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

அதில் அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி- சீல்டா இடையே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் இருக்கும் சொகுசு வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் புதிய வர்ணம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ரயில் பெட்டிகளில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இரவில் படுக்கை எண்கள் தெளிவாக தெரியும் வகையில் மெல்லிய வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

முதல் வகுப்பு பெட்டிகளில் மேல் படுக்கைகளில் ஏறுவதற்கு விசேஷ ஏணிப்படி பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

படுக்கைகளுக்கு பக்கத்தில் அதிக பொருட்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வைப்பதற்கு ஏதுவாக பெரிய அளவிலான பாக்கெட்டுகள் மற்றும் பைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

அனைத்து பெட்டிகளிலும் அதிநவீன கழிவறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசின்கள், புதிய வினைல் ஃப்ளோரிங் போன்றவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

கழிவறைகளில் கைகளை கழுவுவதற்கு ஏதுவாக சோப்பு எந்திரங்கள், குப்பைத் தொட்டிகள் போன்றவையும் வைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்டிகளுக்குள்ளும், கழிவறைகளிலும் கெட்ட வாடை அடிக்காத வகையிலான விசேஷ காற்று சுத்திகரிப்பு வசதி இருக்கிறது.

அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!

ஒவ்வொரு பெட்டியும் ரூ.35 லட்சம் செலவில் இவ்வாறு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்று கருதலாம்.

இதர சுவாரஸ்யச் செய்திகள்:

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் அதிவேக ரயிலின் WAP- 5 எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ரயில்ல பயணிக்கிறது ரொம்ப சந்தோஷம்... ஆனால், ஓட்டுறது ரொம்ப கஷ்டம்... !!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ministry of Railways launched 1ST Swarna Rajdhani ( Train no 12313 New Delhi- Sealdah Rajdhani) rake today.
Story first published: Friday, December 1, 2017, 11:31 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark