புக் பண்ண எல்லாருக்கும் கன்ஃபார்ம் டிக்கெட்! வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இனி இல்லை!
இந்தியாவில் ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் போது காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலை விரைவில் மாறி புக் செய்ய விரும்பும் அனைத்து பயிர்களுக்கும் கட்டாயம் சீட் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தற்போது ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இனி பயணிகள் யாரும் டிக்கெட் முன் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்ற நிலை ஏற்பட உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியாவில் போக்குவரத்திற்கு ரயில்வே நிர்வாகம் மிகப் பெரிய முதுகெலும்பாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் போக்குவரத்து தான் மக்களுக்கு சொகுசாகவும் குறைந்த கட்டணத்திலும் இருக்கிறது. இதனால் மக்கள் பலர் ரயில்களில் பயணம் செய்யவே அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள்.

இதனால் இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பலர் ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் விலை முன்பதிவு செய்தாலும் அவர்களுக்கு சீட்டு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுகிறார்கள். இப்படியாக ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருப்பது பயணிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
காத்திருப்பு பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகுமா? தாங்கள் பயணம் செய்வோமா? மாட்டோமா? என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த குழப்பத்திற்கு தீர்வு கொண்டு வருவதற்காக தற்போது ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரயில்வே உயர் அதிகாரிகள் மத்தியில் நடந்த மீட்டிங் ஒன்றில் இதுகுறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

காத்திருப்பு பட்டியலில் அதிக எண்ணிக்கையான டிக்கெட் இருப்பதற்கு முக்கியமான காரணம் தற்போது ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் ரயில்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை சரி செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
அதன்படி வரும் 2031-32ம் நிதியாண்டில் எந்தெந்த ஊர்களில் இருந்து எவ்வளவு டிக்கெட் புக் செய்யப்படுகிறது என கணக்கிட்டு எந்தெந்த நாட்களில் அல்லது நேரங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதையும் கணக்கிட்டு அதற்கு ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் புதிய ரயில்களை அதிகமாகப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இதற்காக ரயில்வே நிர்வாகம் தானியங்கியாக இயங்கும் தளம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த தளத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் ரெண்டை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் ரயில் பெட்டிகளில் மாற்றம் கொண்டுவர பரிந்துரை செய்யும். அது மட்டுமல்லாமல் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் இந்த தொழில்நுட்பம் முடிவு செய்து அதற்கான தகவல்களை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கும்.
இதை முழுமையாக கொண்டு வர சில காலம் தேவைப்படுவதால் இன்னும் 7 ஆண்டுகள் வரை இதற்கு காலஆவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தியாவில் யார் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், அவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று இல்லாமல் அனைவருக்கும் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும் என தெரிகிறது.
இந்தியா முழுவதும் தற்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் என்பது நீளமாக இருக்கிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் விடுமுறை காலகட்டங்கள் கோடை காலகட்டங்கள் மழை கால கட்டங்கள் என ஒவ்வொரு விதமான டிரெண்ட் இருக்கிறது. கடந்த கோடையிலும் கூட இந்தியாவில் இதற்கு முந்தைய கொடையை விட 10% அதிக ரயிலில் இயங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த இந்திய ரயில்வே நிர்வாகத்தில் உள்ள ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று கூறும் சூழ்நிலையை மாற்றி அனைவருக்கும் டிக்கெட் வழங்கும் நடைமுறையை கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இதற்கான கால அவகாசத்தை குறைத்தால் மக்கள் விரைவில் பயன்பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications









