பிட்காயின் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகரின் கணவர்.. இத்தன கோடி ரூபா கொடுத்து சொகுசு காரை வாங்கியிருக்காரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோட்டஸ் (Lotus) நிறுவனத்தின் அரிய வகை தயாரிப்பான எலெட்ரே (Eletre) எனும் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். ராஜ் குந்த்ரா, ஓர் மிக சிறந்த பிசினஸ்மேன் ஆவார். இவர் சமீப சில காலமாக திரைப்படங்களிலும் தோன்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவர் லோட்டஸ் நிறுவனத்தின் உயரிய வகை கார் மாடலை வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் விலை 2.55 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். ஆனால், லோட்டஸ் எலெட்ராவின் ஆரம்ப நிலை தேர்வுடைய விலை மட்டுமே இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலைக் கொண்ட சொகுசு காரையே ராஜ் குந்த்ரா வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Raj kundra shilpa shetty

இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எலெட்ரே (Eletre), எலெட்ரே எஸ் (Eletre S) மற்றும் எலெட்ரே ஆர் (Eletre R) ஆகியவையே அவை ஆகும். இதில் எலெட்ரே ரூ. 2.55 கோடிக்கும், எலெட்ரே எஸ் தேர்வு ரூ. 2.75 கோடிக்கும் மற்றும் எலெட்ரே ஆர் வேரியண்ட் ரூ. 2.99 கோடிக்கும் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மூன்றில் ரூ. 3 கோடி விலைக் கொண்ட எலெட்ரே ஆர் வேரியண்டையே ராஜ் குந்த்ரா வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோட்டஸ் நிறுவனம் சென்ற ஆண்டின் இறுதியிலேயே தன்னுடைய கால் தடத்தை இந்தியாவில் பதித்தது. தன்னுடைய இந்திய வருகையை தொடர்ந்து அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே எலெட்ரே ஆகும்.

Raj Kundra s 3 Cr Luxury Car

இதுவே லோட்டஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிய முதல் கார் மாடல் ஆகும். லோட்டஸ் நிறுவனம் 1940 ஆம் ஆண்டில் இருந்தே கார் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது. உயர் ஆற்றலை உருவாக்கும் கார்களை உருவாக்குவதில் பெயர்போன நிறுவனமாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக இது இருக்கின்றது. தன்னுடைய இந்த யுக்தியை பயன்படுத்தியே லோட்டஸ் நிறுவனம் எலெட்ரே-வை தயார் செய்திருக்கின்றது. மிகவும் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் மற்றும் அதிநவீன டிரைவிங் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஓர் தயாரிப்பே இதுவாகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 258 கிமீ முதல் 265 கிமீ ஆகும்.

இதேபோல், அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் எலட்ரே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 490 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ஜை தரக் கூடிய பேட்டரி பேக்கையே இந்த காரில் லோட்டஸ் பயன்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

அந்தவகையில், இந்த காரில் பெரிய 15.1 அங்குல மிதக்கின்ற வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை மட்டுமின்றி டிரைவருக்கான ஓர் டிஜிட்டல் திரையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மூன்றாவதாக பயணிகளுக்கான ஓர் திரையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமின்றி, 23 ஸ்பீக்கர்கள் கொண்ட கேஇஎஃப் சவுண்டு சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver-assistance system) ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராஜ் குந்த்ரா பிட்காயின் மோசடி வழக்கில் சிக்கி சட்டச் சிக்கல்களுக்கு ஆளாகினார். ரூ.90.38 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED), ராஜ் குந்த்ராவின் சொத்துக்கள் சிலவற்றை முடக்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே விலை உயர்ந்த ஆடம்பர காரை அவர் தலைப்பு செய்தியில் மீண்டும் இடம் பிடித்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 11:00 [IST]
English summary
Raj kundra buys luxury lotus eletre amidst legal challenges
மேலும்... #lotus #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+