அந்த பிரபல நடிகையின் கணவர் தானே இது? சர்வ சாதாரணமாக பென்ஸ் காரில் வந்துட்டு போய் உள்ளார்
ராஜ் குந்த்ரா (Raj Kundra), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களுக்கு இருக்கலாம். பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)-ஐ தெரியும் அல்லவா. அவரது கணவர் தான், ராஜ் குந்த்ரா ஆவார். இலண்டனில் பிறந்த இந்திய வம்சாவளியான ராஜ் குந்த்ரா, அவ்வப்போது புதியது புதியதாக சொகுசு கார்களை வாங்க கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் வாங்கிய மெர்சிடிஸ் காரில் இருந்து ராஜ் குந்த்ரா வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர்கள் அவ்வப்போது புதியது புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்குவதை நமது செய்தி தளத்தில் பார்த்து வருகிறோம். குறிப்பாக, மெர்சிடிஸ் கார்களை தான் அவர்கள் அதிகமாக வாங்குகின்றனர். இதனாலேயே, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது.

ஆதலால், தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா புதியதாக வாங்கிய மெர்சிடிஸ் கார் உடன் காட்சி தந்திருப்பதில் பெரியதாக ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபரான ராஜ் குந்த்ரா, இங்கிலாந்தில் வசிக்கும் மிக பெரும் ஆசிய பணக்காரர்களுள் 198வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடூ செய்தவர்களுள் ராஜ் குந்த்ராவும் ஒருவர் ஆவார். அந்த அளவிற்கு செல்வ செழிப்பில் திகழும் ராஜ் குந்த்ரா புதியதாக வாங்கியிருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ300 (GLE300) கார் ஆகும். இந்த காருடன் விமான நிலையத்திற்கு ராஜ் குந்த்ரா வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

வீடியோவில், வெள்ளை நிறத்திலான புத்தம் புதிய ஜிஎல்இ300 காரில் இருந்து வெளியே வரும் ராஜ் குந்த்ராவின் பொருட்களை கொண்டு செல்ல விமான நிலைய ஊழியர் ஒருவர் முன்வருவதை பார்க்க முடிகிறது. பின்னர், விமான நிலையத்தில் சூழ்ந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை நோக்கி கையசைத்துவிட்டு ராஜ் குந்த்ரா விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ300 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் ஜிஎல்இ கார்களுள் இதுவும் ஒன்றாகும். ஜிஎல்இ300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.99 லட்சமாக உள்ளது. இது இல்லாமல், ஜிஎல்இ450 காரும் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. ஜிஎல்இ300 ஆனது டீசல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதுவே, ஜிஎல்இ450 ஆனது டீசல் மற்றும் ஹைப்ரீட் என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. டீசல் என்ஜின் உடன் ஜிஎல்இ450 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.17 கோடி மற்றும் ஹைப்ரீட் ஆப்ஷனில் ரூ.1.12 கோடி ஆகும். அப்சிடியன் பிளாக் மெட்டாலிக், சோடாலைட் ப்ளூ மெட்டாலிக், செலெனைட் கிரே மெட்டாலிக், ஹை-டெக் சில்வர் மெட்டாலிக் மற்றும் போலார் வெள்ளை என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.99 லட்சம் என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.1.50 கோடி என்கிற அளவிற்கு வந்துவிடும். இருப்பினும், ரூ.1.50 கோடி என்பது கூட ராஜ் குந்த்ரா போன்றோருக்கு பெரிய விஷயமே கிடையாது. ஏனெனில், தொழிலதிபராக இருப்பது மட்டுமின்றி சமீப காலமாக ராஜ் குந்த்ரா சினிமா திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications









