புது ஆடி காரை விடுங்க, நம்பர் பிளேட்டுக்காக மட்டும் எவ்வளவு செலவு தெரியுமா? தொழிலதிபர் மகனின் புதிய கார்!
இந்தியாவில் பணக்காரர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், தனது மகனுக்கு ஒரு ஆடி ஆர்.எஸ் க்யூ8 (Audi RS Q8) காரை வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாமல், அதற்கு அதிக செலவு செய்து ஒரு ஃபேன்சி நம்பர் பிளேட்டையும் வாங்கியுள்ளார்.
அந்த நம்பர் பிளேட்டிற்காக செலவழிக்கப்பட்ட தொகை மட்டும் ஒரு மஹிந்திரா எக்ஸ்யூவி 9இ (Mahindra XUV 9e) எலெக்ட்ரிக் காரின் உயர் ரக வேரியண்ட்டின் விலைக்குச் சமம் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பல வெளிநாடுகளிலும் ஃபேன்சி நம்பர் பிளேட்டுகளுக்கான ஏலங்கள் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

இப்போது நாம், ராஜஸ்தானில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் தனேஜா (Rahul Taneja) என்ற தொழிலதிபர் தனது மகனுக்கு ரூ.2.32 கோடி மதிப்புள்ள ஆடி ஆர்.எஸ் க்யூ8 காரை பரிசாக அளித்துள்ளார். இந்த காருக்கு 'RJ60 CM 1' என்ற ஃபேன்சி பதிவெண்ணை ஆர்டிஓ-இல் பதிவு செய்து பெற்றுள்ளார்.
இந்த நம்பர் பிளேட்டின் விலை ரூ.31 லட்சம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 9இ எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.31.25 லட்சம் வரையில் உள்ளது. மகனுக்காக இந்த ராஜஸ்தான் தொழிலதிபர் வாங்கியிருக்கும் ஆடி காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.32 கோடியாக உள்ளது.
காரின் விலையில் சுமார் 15% தொகையை நம்பர் பிளேட்டுக்காக செலவழித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்தியாவில் பெர்ஃபார்மன்ஸ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ஆடி ஆர்.எஸ்8 கார் விற்பனை செய்யப்படுகிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.2.32 கோடியாகும். இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை இன்னும் பல லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

இன்ஸ்டாகிராமில் 'jaipur.waley_' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, இந்த கார் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராகுல் தனேஜா தனது மகனுக்குப் பரிசாக வாங்கியுள்ளார். இவருக்கு சொந்தமாக ஆடி ஆர்.எஸ் க்யூ8 மட்டுமின்றி, ஜாகுவார் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களும் உள்ளன. வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ராகுல் தனேஜா, தனது முதல் வேலையை மாதம் ரூ.150 சம்பளத்தில் ஒரு தாபா உணவகத்தில் தொடங்கினார்.
அவரது கடின உழைப்பும் விடாமுயற்சியும், பல சொகுசு கார்களையும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விஐபி நம்பர் பிளேட்டுகளையும் வாங்குமளவுக்கு அவரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டில், அவர் தனது பிஎம்டபிள்யூ காருக்காக ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கி இருந்தார். இப்படிப்பட்ட கதைகள், வாழ்வில் போராடுபவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கு வழி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஐபி நம்பர் பிளேட்டுகளுக்காக அதிக பணம் செலவழிப்பது உலகெங்கிலும் அவ்வப்போது நடக்கக்கூடிய விஷயமே. இருப்பினும், ராஜஸ்தான் தொழிலதிபர் ராகுல் தனேஜா காரின் விலையில் 15% பணத்தை கூடுதலாக நம்பர் பிளேட்டிற்காக செலவு செய்திருப்பது மிரள வைக்கிறது. இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் கதை. ஆடி ஆர்.எஸ் க்யூ8 கார் ஏற்கனவே ராகுல் தனேஜாவின் வெற்றியின் அடையாளமாக இருந்தாலும், ரூ.30 லட்சத்திற்கும் மேல் நம்பர் பிளேட்டுக்காக செலவழித்திருப்பது ஆடம்பரத்தின் உச்சம்.


Click it and Unblock the Notifications








