நட்ட நடு சாலையில், பொது மக்கள் மத்தியில் முதலமைச்சரின் கான்வாய் கார்களுக்கு நடந்த பரிதாபம்..!!

Written By:

சாலையில் இயக்கத்தில் இருக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கு பெரும்பாலான காரணம், வாகனங்களுக்கு இடையில் முறையான இடைவெளியை பின்பற்றாமல் செல்வது தான்.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் பல இன்று நெருக்கடியில் தான் இயங்குகின்றன. அதனால் ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக வரும் வாகனங்கள் முறையான இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகிறது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

முறையான இடைவெளியை பின்பற்றி செல்லததால், இந்தியாவின் பிரபல முதல்வர்களில் ஒருவருடைய கான்வாய் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு செய்தி அதிர்ச்சி தரும் நிலையில்,

அந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

ராஜஸ்தான் மாநில முதல்வர்

வசுந்திரா ராஜே . இந்தியாவின் முக்கியமான பெண் முதல்வர். பெரிய அந்தஸ்து பெற்ற பாஜக தலைவராகவும் உள்ளார்.

பத்மாவதி படம் சர்சை தொடர்பாக இவர் காத்து வரும் மௌனம், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மீது தேசியளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

ஜுகுன்ஜுஹூ பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு முதல்வர் வசுந்தரா ராஜே தனது கான்வாய் வாகனங்களுடன் சென்றுக்கொண்டு இருந்தார்.

Recommended Video - Watch Now!
[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

அப்போது குதா கோர்ஜி பகுதிக்கு கார்கள் வரிசையாக வந்த போது, கான்வாயில் இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் ஒன்று திடீரென செயலிழந்தது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

நடுவழி சாலையில் நின்றுவிட்ட ஃபார்ச்சூனர் கார் மீது, அதே கான்வாயில் தொடர்ந்து எஸ்யூவி கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால், கான்வாயில் இருந்த மற்ற கார்கள் முன்னும் பின்னும் சேதமடைந்தன.

கான்வாயை தொடர்ந்து வந்த மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களும் நின்றிருந்த எஸ்யூவி-க்கள் மீது மோதின.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

கண்யிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த விபத்தால், காரில் இருந்த யாருக்கும் பெரிய ஆபத்து ஏற்படவில்லை. கார்கள் மட்டுமே சில சேதங்களை சந்தித்துள்ளன.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

ஒரு வாகனத்தை பின்பற்றி செல்லும் மற்றொரு வாகனம், சரியான இடைவெளியில் செல்ல வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

என்னதான் விஐபி-க்களாக இருந்தாலும், அவர்களுக்கும் வேக கட்டுபாடு உள்ளது. குறிப்பாக கூட்டம் நிறைந்த சாலைகளில் விஐபி-க்கள் அணிவகுத்து செல்லும் போது, இதுபோல விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

நெருக்கடியான சாலைகளில் ஒன்றுக்கு பின் ஒன்றாக கார்களில் செல்லும் போது நாம் வாகனத்தை இயக்கவேண்டிய முறை:

நெருக்கடியான சாலைகளில் ஒன்றுக்கு பின் ஒன்றாக கார்களில் செல்லும் போது நாம் வாகனத்தை இயக்கவேண்டிய முறை:

  • நெரிசல் மிகுந்த சாலைகளில் கார்களை ஓட்டி செல்பவர், 2 நொடி விதியை பின்பற்ற வேண்டும்.
  • 2 நொடி விதி என்பது, சாலையில் செல்லும் கார்களுக்கு இடையில் 2 நொடி நேரம் கொண்ட இடைவெளி இருக்க வேண்டும்.
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!
  • அந்த தொலைவை அறிய நாம் ஒருமுறை எலெக்ட்ரிக் போல் பயன்படுத்தினால் போதும், மறுமுறை நெருக்கடியான சாலைகளில் ஒரு காருக்கு பின்னால் செல்ல நேர்ந்தால், கண்ணால் அளந்தாலே போதும்.
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

2 நொடி விதியை முறையாக பின்பற்றினால், ஆபத்து காலத்தில் கூட அது பயனளிக்கும்.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!
  • முன்னால் செல்லும் காரை இடிக்க போகிறோம் என்று ஒரு கட்டத்தில் தெரிந்தால், அதை தவிர்க்க 2 நொடி விதி உங்களுக்கு பிரேக்கை சரியாக பயன்படுத்த நேரம் தரும்.
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!
  • சரியாக சொல்ல வேண்டும் என்றால், நெருக்கடியான தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஒரு காருக்கு பின்னால் உங்கள் கார் இருந்தால், 2 நொடிக்கும் அதிகமான இடைவெளிகளை பின்பற்றலாம்.
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!
  • இதுவே நீங்கள் அடர்ந்த பனி, கனமழை, இரவு போன்ற சூழ்நிலைகளின் கார் ஓட்ட நேர்ந்தால், 5 நொடிகள் விதியை பின்பற்றுவது சரியாகும்.
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

விஜபி கார்கள் அதிவேக திறனில் பயணிப்பது ஆபத்தான ஒன்று தான். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விஜபி கார்கள் சிறப்பு விதிகளை பின்பற்றுகின்றன.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் கான்வாய் வாகனங்களுக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த கார் அணிவகுப்பிற்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட முதலவர் கான்வாய் கார்கள்..!!

அதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் என்றாலும், விஜபி-க்கள் என்றாலும், ஆபத்து ஏற்படுவதில் இருந்து தவிர்க்க முறையான வேக கட்டுப்பாட்டை பின்பற்றுவது சாலச்சிறந்து.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: This Chief Minister’s Toyota Fortuner Gets Into A Five-Car Pile-Up. Click for Details...
Story first published: Tuesday, December 5, 2017, 17:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark