முன்னாள் முதலமைச்சர்னு சொன்னாங்க, எவ்வளவு சிம்பிளாக இருக்கார்! டாடா காரை வாங்கியது கைமேல் பலன் கிடைக்குது!
சாதாரண குடிமகன் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி உடன் நேரடியாக பேசுவது எல்லாம் மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும். மக்களுள் ஒருவருடன் பேசுவதற்காக அத்தகைய அரசியல் பிரபலங்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதே பெரிய விஷயம். அப்படியிருக்க, இங்கு ஒருவர், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உடன் நேரில் ஜாலியாக கைக்குலுக்கி பேசியது மட்டுமின்றி, தற்சமயம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காரை விற்கவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் (Ashok Gehlot) ஆவார். ஒட்டுமொத்த மாநிலத்தையே ஒரு சமயத்தில் ஆட்சி செய்தவராக இருப்பினும், அசோக் கெஹ்லாட் மிகவும் எளிமையான மனிதர் ஆவார். குறிப்பாக, அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார் விஷயத்தில் மிகவும் எளிமையானவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், இப்போதும் அசோக் கெஹ்லாட் 13 வருட பழைய டாடா சஃபாரி ஸ்டோர்ம் (Tata Safari Storme) காரையே பயன்படுத்தி வருகிறார். இதைதான், அசோக் கெஹ்லாட்டின் நலன் விரும்பி ஒருவர் அன்போடு கேட்டுள்ளார். ராஜஸ்தானில் சமீபத்தில், மக்கள் திரளாக கலந்துக் கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அவர்களும் கலந்துக் கொண்டார்.
அப்போது, அசோக் கெஹ்லாட் தனது 13-வருட பழைய டாடா சஃபாரி ஸ்டோர்ம் காரின் முன் இருக்கையில் அமர்ந்து சென்றுக் கொண்டிருக்கையில், சிம்பு தயாள் சைனி என பெயர் கொண்ட இளைஞர் ஒருவர் மற்றவர்களை போல முன்னாள் முதல்வரிடம் தனது கோரிக்கையை முன்வைக்க வந்தார். அசோக் கெஹ்லாட் உடன் கைக்குலுக்கியப்படி பேச துவங்கிய சிம்பு தயாள் சைனி, புதியதாக டிஃபெண்டர் (Defender) கார் ஒன்றை வாங்குமாறு வேண்டுக்கோள் விடுத்தார்.

இதற்கு, "என்ன டிஃபெண்டர்?", "நான் ஏன் அதை வாங்க வேண்டும்?" என அசோக் கெஹ்லாட் கேள்வி எழுப்ப, உடனே அந்த நபர் "சிறப்பான கார்" என கூறியுள்ளார். இதற்கு பதலளித்த அசோக் கெஹ்லாட், சஃபாரி சிறந்த வாகனம் என்றும், இதனை நீண்ட காலமாக உபயோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், டிஃபெண்டர் கார் ஒன்றை வாங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய சிம்பு தயாள் சைனி ஓர் டீக்கடை உரிமையாளர் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒரே சஃபாரி காரை பயன்படுத்தி வருவதை கண்கூடாக பார்த்ததினாலேயே இப்படியொரு வேண்டுக்கோளை அவர் அசோக் கெஹ்லாட்டிடம் முன்வைத்துள்ளார்.
சிம்பு தயாள் சைனி கூறும் அளவிற்கு டிஃபெண்டர் கார் சிறப்பு வாய்ந்ததா என கேட்டால், ஆம்... லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்கும் டிஃபெண்டர் கார்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் குறிப்பாக சினிமா (Cinema) நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் தான் கம்பீரமான தோற்றம் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களை அதிகமாக வாங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேறொரு காரை வாங்குங்கள் என கூறிய நபரிடம் இந்த சஃபாரி காருக்கு என்ன குறை? என கேட்பதுபோல் பதிலளித்து இருப்பதில் இருந்தே அசோக் கெஹ்லாட் எந்த அளவிற்கு அவரது டாடா சஃபாரி ஸ்டோர்ம் காருடன் நெருங்கிய பிணைப்பில் உள்ளார் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், ரசிகரின் வேண்டுக்கோளுக்கு இணங்க விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை அசோக் கெஹ்லாட் வாங்குவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Source: Cartoq


Click it and Unblock the Notifications








