எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... வட இந்தியாவை புரட்டி போடும் வெயில் - போலீஸ் கொத்த தூக்க போறாங்க!!
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்ப அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. தென்னிந்தியாவில் கோடைக்கால வெப்பம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால், இந்த ஆண்டில், இமயமலை தொடருக்கு கீழே இருக்கும் வட இந்திய மாநிலங்களில் கூட வெயில் கொளுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால், நம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்டது. ஆனால், வட இந்தியாவில் இன்னுமும் கோடை காலம் முடியவில்லை. இந்த நிலையில், ராஜஸ்தானில் ஒருவர் தனது ஸ்கூட்டரில் குழாயை அமைந்து நீரில் குளித்துக் கொண்டே பயணம் செய்யும் வகையிலான செட்-அப்பை அமைத்துள்ளார்.
ராஜஸ்தான் வெயிலுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் மிக பெரிய தார் பாலைவனம் ராஜஸ்தானில் தான் உள்ளதை பற்றி நான் கூறவேண்டியது இல்லை. ஆனால், கடந்த 73 வருடங்களில் இல்லாத அளவிற்கு ராஜஸ்தான் உள்பட இந்திய வடமேற்கு மாநிலங்களில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது.

இதனால், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெயிலை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் வித்தியாசமாக யோசித்து, ஸ்கூட்டரில் குளியலறையை கொண்டுவந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபன் வித் சிங் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் துவக்கத்தில், பாத் ரூம் ஷவர் மூலமாக ஸ்கூட்டரில் இளைஞர் ஒருவர் குளித்துக் கொண்டே செல்வது காட்டப்படுகிறது. குளித்துக் கொண்டே செல்கிறார் என சொல்வதை காட்டிலும், தன் உடலை குளுமைப்படுத்திக் கொண்டே செல்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

வீடியோவில், இந்த காட்சிகளை காட்டிய பின் இந்த குளியல் செட்-அப் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சம் விரிவாக காட்டப்பட்டுள்ளது. இந்த செட்-அப்பில் ஒரு குழாய், சிறிய ஷவர் மற்றும் நீல நிறத்தில் வாட்டர் கேன் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவ்வாறு ஸ்கூட்டரில் ஒருவர் குளித்துக் கொண்டே செல்வதை பார்க்கும் மக்கள் இவரை பார்த்து சிரிப்பதையும், கேலி கிண்டல்கள் செய்வதையும் வீடியோவில் காணலாம்.
மேலும் சிலர், இந்த நபரை மொபைல் போனில் காட்சிப்படுத்தி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு உள்ளனர். ஸ்கூட்டரில் இவ்வாறான செட்-அப்பை அமைப்பதினால், உங்களால் சவுகரியமாக வாகனத்தை ஓட்ட முடியாமல் போகலாம். இதன் விளைவாக விபத்து ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த நபரின் ஸ்கூட்டரில் இருந்து வழிந்தோடும் நீர் சாலையில் சகதியை ஏற்படுத்தக்கூடும். பின்னால் வரும் வாகனங்கள் அந்த சகதியில் செல்லும்போது அவற்றின் டயர்கள் வழுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று, காரினுள் நீச்சல் குளத்தை அமைத்து குளித்துக் கொண்டே பயணம் செய்ததினால் கேரளாவில் சமீபத்தில் ஒரு யூடியூப்பரின் ஓட்டுனர் உரிமம் வாழ்நாள் முழுவதற்கும் தடை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை காலங்களில் வாகன ஓட்டிகள் எப்போதும் கொஞ்சம் உஷாராக இருப்பார்கள். ஆனால், கோடை காலங்களில் இவ்வாறு சாலையில் நீரை இரைத்துக் கொண்டு செல்லும்போது, வாகன ஓட்டிகள் பலர் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால், விபத்துகள் ஏற்படலாம். இதை விட முக்கியமாக, இவ்வாறான செயல்கள் சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனத்தை சிதறடிக்க அதிக வாய்ப்புண்டு.


Click it and Unblock the Notifications









