நிலத்தை விற்று கிரிக்கெட்டிற்குள் வந்தவர்.. சாதனை படைத்ததற்காக காரு-பணம்னு பரிசு மழையா கொட்டுது!
இளம் ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்சி-க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் காஸ்ட்லியான காரை பரிசாக தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) சொகுசு காரையே பரிசாக வழங்கி இருக்கின்றார். இதுகுறித்த படமே இப்போது வெளியாகி இருக்கின்றது. வைபவ் சூர்யவன்ஷிக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் அந்த காரின் மதிப்பு சுமார் 1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிகின்றன.
நேற்று முன் தினம் (ஏப்ரல் 28) குஜராத் டைட்டன்ஸ்-க்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் வைபவ் மட்டும் 101 ரன்களை குவித்து அசாத்தியமான சாதனையைப் படைத்தார். இத்தகைய ரன்களைக் குவித்ததன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இத்துடன் சேர்த்தே அவருக்கு ஆடம்பர காரும் பரிசாக வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தொழிலதிபரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான ரஞ்சித் பர்தாகூர், வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தப் பரிசை நேரில் வழங்கினார். அவருக்கு என்ன கார் மாடல் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் கிடைக்கவில்லை.
அதேவேளையில், ரூ. 1 கோடிக்கு இணையான விலையில் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ-கிளாஸ் செடான் லாங் கார் மாடலே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 79.50 லட்சம் ஆகும். ஆன்-ரோடில் இதன் மதிப்பு ரூ. 1 கோடியை நெருங்கும். இந்த காரையே இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு பரிசாக வழங்கி இருக்கலாம் என நாங்கள் யூகிக்கின்றோம்.
விரைவிலேயே இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ஏ கிளாஸ் அல்லது சி கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எதுவாக இருந்தாலும் இந்த பரிசளிப்பு வைபவ்-இன் திறமைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகின்றது. இவருக்கு இப்போது பரிசு மட்டுமல்ல உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டும் குவிந்து வருகின்றது.
குறிப்பாக, இந்த சதம் எடுத்ததற்கு பின்னர் மிகப் பெரிய அளவில் வைபவ் பேசு பொருளாக மாறியிருக்கின்றார். மேலும், எங்கு பார்த்தாலும் இவரை பற்றிய பேச்சே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ராஜஸ்ஜான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் வைபவ் ஆடம்பர கார் பரிசால் பெருமிதப்படுத்தி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று ஆடம்பர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுவது முதல் முறையல்ல. குறிப்பாக, கிரிக்கெட் உலகத்தில் கார் பரிசளிப்பு புதிதல்ல. டாடா மோட்டார்ஸ்கூட தன்னுடைய அதிகாரப்பூர் ஐபிஎல் வாகனத்தை கடந்த காலங்களில் சிக்சர் அடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றது.
குறிப்பாக, அந்த சிக்ஸர் பந்து மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார் மீது விழும்படி அடிக்கும் வீரர்களுக்கே காரை பரிசாக டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே சதம் அடித்ததற்காக இளம் விளையாட்டு வீரருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர் சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்.
இதுமட்டுமல்ல பிஹார் முதலமைச்சர் இவருக்கு ரூ. 10 லட்சம் பரிசை அறிவித்திருக்கின்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ்-இன் கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவருடைய அப்பா, தன்னுடைய விவசாய நிலத்தை விற்றே அவரை பயிற்சியைத் தொடங்கச் செய்திருக்கின்றார். அவரின் இந்த இழப்பு மற்றும் தியாகத்திற்கு பரிசளிக்கும் விதமாக வைபவ் ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து அவருக்கு பெருமிதம் சேர்த்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








