திடீர்னு வந்து நின்ன நானோ! உள்ளே இருந்து இறங்கியவரை பாத்ததும் உறைந்து போன மக்கள்! படங்களை விஞ்சும் மாஸ் சீன்!

பொதுவாக கோடீஸ்வரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars) அவர்கள் பயணம் செய்வார்கள். முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தினர் இதற்கு ஒரு உதாரணம். ஆனால் விதிவிலக்காக ஒரு சில கோடீஸ்வரர்கள், மிகவும் சாதாரணமான கார்களில் பயணம் செய்கின்றனர்.

இதற்கு ராஜேஷ் ஹிராநந்தானி (Rajesh Hiranandani) ஒரு உதாரணம். பெரும் கோடீஸ்வரரான இவர் டாடா நானோ (Tata Nano) காரில் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ராஜேஷ் ஹிராநந்தானி சாதாரண டாடா நானோ காரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Rajesh Hiranandani Spotted In Tata Nano

எனவே நெட்டிசன்கள் பலரும் இந்த வைரல் வீடியோவை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். டாடா நானோ ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று. டூவீலர்களில் இந்திய மக்கள் சிரமப்படுவதை பார்த்து, அவர்களுக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஒரு விலை குறைவான கார்தான் நானோ.

டூவீலர்களில் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் இடையே குழந்தைகள் 'சாண்ட்விச்' போல் நசுங்கி கொண்டு பயணிப்பதை பார்த்து மனம் கலங்கிய காரணத்தால்தான், டாடா நானோ கார் உருவாக்கப்பட்டதாக ரத்தன் டாடாவே (Ratan Tata) ஒரு முறை கூறியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் இது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கான கார்.

Ratan Tata s Nano EV

அப்படிப்பட்ட ஒரு காரில், ராஜேஷ் ஹிராநந்தானி போன்ற கோடீஸ்வரர் ஒருவர் வந்து இறங்கியதை பார்த்து, நிகழ்விடத்தில் இருந்த பலரும் ஆச்சரியமடைந்து விட்டனர். ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், விதிவிலக்காக ஒரு சில கோடீஸ்வரரர்கள் மிகவும் சாதாரணமான கார்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.

ரத்தன் டாடா கூட அதற்கு ஒரு உதாரணம்தான். ரத்தன் டாடாவிடமும் ஒரு நானோ கார் உள்ளது. ஆனால் அது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இது ரத்தன் டாடாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ரத்தன் டாடாவிடம் மின்சாரத்தில் இயங்க கூடிய நானோ கார் இருப்பதை பார்த்ததும், ஒரு தகவல் காட்டு தீ போல் பரவ தொடங்கியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பதுதான் அது. மேலும் இம்முறை டாடா நானோ கார் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரும் எனவும் யூகங்கள் சிறகடித்து பறக்க தொடங்கின. ஆனால் தற்போது வரை இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே டாடா நானோ கார் எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வருமா? என்பது சந்தேகமே!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெரும் கோடீஸ்வரர்கள் டாடா நானோ போன்ற கார்களை பயன்படுத்துவது எங்களுக்கும் ஆச்சரியமாகதான் உள்ளது. இதற்கு முன்பாக ராஜேஷ் ஹிராநந்தானி ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்களை ஓட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 23:29 [IST]
English summary
Rajesh hiranandani spotted in tata nano viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+