சூப்பர் ஸ்டார் வேற லெவலுங்க.. கோடி கோடியா சொத்திருந்தும் இவ்ளோ கம்மி ரூபா காரிலா சின்னம்மா வீட்டுக்கு வந்தாரு!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் லால் சலாம். ரஜினியுடன் சேர்ந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், மிக சிறப்பான வசூலையும் அது பெற்றுக் கொண்டிருக்கின்றது. முன்னதாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே பலர் இந்த படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், தற்போது திரைப்பட குழு இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கின்றது. இந்த மாதிரியான மன நிலையிலேயே, அதாவது, கொண்டாட்ட மன நிலையிலேயே சமீபத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சசிகலாவின் 'ஜெயலலிதா இல்லம்'-த்திற்கு ஓர் விசிட்டைக் கொடுத்தார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

Rajini uses toyota innova hycross sasikala house

இந்த வீடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு நேரெதிரில் அமைந்திருக்கின்றது. சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் வரை இந்த இல்லத்திலேயே தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, இந்த இல்லம் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா வசம் நீதிமன்ற உத்தரவின்படி ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், சிறையில் இருந்து வெளிய வந்த பின்னர் சசிகலா தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். மேலும், அங்கிருந்தபடியே போயஸ் கார்டனில் வேதா இல்லத்திற்கு நேர் எதிரில் ஓர் பிரமாண்ட வீட்டையும் அவர் கட்டினார். இந்த வீட்டிற்கு சமீபத்திலேயே புதுமனை புகுவிழா கொண்டாடப்பட்டது.

Sasikala house

இதில் விஐபி-க்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேலும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அப்போது அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையிலேயே சசிகலாவின் புதிய இல்லத்திற்கு நேரில் விசிட் கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த பயணத்திற்கு அவர் மிக மிக எளிமையான கார் ஒன்றை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். ரஜினியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. அவர் டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் காரையே பயன்படுத்தினார். நடிகர் ரஜினிகாந்திடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்ற சூழலில் அவரோ இந்த காரை பயன்படுத்தி இருக்கின்றார்.

Toyota innova hycross

நடிகர் ரஜினியிடத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 போன்ற விலையுயர்ந்த பிராண்ட் நியூ சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு கார், ஜெயிலர் திரைப்பட வெற்றியை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் சார்பில் ரஜினிக்கு வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை கலாநிதி மாறனே, நேரடியாக நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு வந்து வழங்கினார்.

இதுபோன்ற இன்னும் பல சூப்பரான விலை உயர்ந்த கார்கள் ரஜினி பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும் அவர் தற்போது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பயன்படுத்தி இருக்கின்றார். என்னதான் கோடி கோடியாக இவர் சம்பாதித்தாலும் வெளி உலகில் எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்கு சான்றாக அவர் கடந்த காலங்களிலும் இதுபோன்ற எளிமையான உடை மற்றும் வாகனங்கள் வலம் வந்திருக்கின்றார். அந்தவகையில், இன்னோவா கிரிஸ்டா காரையே கடந்த காலத்தில் அவர் பயன்படுத்தி வந்தார். தற்போது இன்னோவா ஹைகிராஸ் கார் பயன்பாட்டிற்கு ரஜினி மாறி இருக்கின்றார். இன்னோவா ஹைகிராஸின் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட காரையே ரஜினி பயன்படுத்தி வருகின்றார்.

அதிகம் மைலேஜிற்கு போயர்போன கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. வழக்கமான பெட்ரோல் மோட்டாரை மட்டும் கொண்டிருக்கும் இன்னோவா ஹைகிராஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 கிமீ மைலேஜை மட்டும். அதேவேளையில், ஸ்ட்ராங் ஹைபிரிட் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கே 23 கிமீ மைலேஜை வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இத்தகைய அதிக மைலேஜை வழங்கக் கூடிய ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட காரையே ரஜினிகாந்த் தற்போது பயன்படுத்தி வருகின்றார். ரஜினியைப் போலவே இன்னும் பல இந்தியர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப் போனால் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாகவே இன்னோவா ஹைகிராஸ் தற்போது மாறிவிட்டது.

இதனால்தான் இந்த கார் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதில் சுவாரஷ்யம் என்னவென்றால் ஏற்கனவே இந்த கார் விற்பனையில் சாதனையைப் படைக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில்தான் இந்த கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியது. 50 ஆயிரம் யூனிட் விற்பனை எனும் அசாத்தியமான சாதனையையே அது படைத்திருக்கின்றது.

விற்பனைக்கு வந்து 14 மாதங்களே ஆகின்ற நிலையில் இந்த சாதனையை அது படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இன்னோவா ஹைகிராஸ் காரை இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது டொயோட்டா. இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் மிக அதிகளவில் பிரீமியம் அம்சங்கள் மற்றும் இட வசதியைக் கொண்டதாக இந்த மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேர்த்து டொயோட்டா இந்த காரில் லேன் டிரேஸ் அசிஸ்ட், டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகியவற்றை வழங்கும் தொழில்நுட்பத்தையும் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, வென்டிலேட் இருக்கை, பவர்டு ரியர் டோர், பின் பக்கத்திற்கான சன்ஷேட், மல்டி - ஸோன் ஏசி, எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம் மற்றும் ஓட்டோமேன் இருக்கைகள் போன்ற அம்சங்களையும் இன்னோவா ஹைகிராஸ் இந்த காரில் வழங்கி இருக்கின்றன.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், ப்ரீ கொலிசன் சிஸ்டம், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான தரமான அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேய இந்த காருக்கு ரஜினி போன்ற பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சசிகலா கட்டியிருக்கும் சொகுசு பங்களாவின் மதிப்பு ரூ. 250 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இந்த வீட்டைப் பார்த்த ரஜினி, வீடு கோவில் இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். அத்துடன், சசிகலாவிற்கு பரிசு ஒன்றையும் வழங்கி அங்கிருந்த அவர் கிளம்பிச் சென்றார். ரஜினியின் இந்த வருகை பெரும் பேசுபொருளாக தற்போது மாறி இருக்கின்றது.

இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் ரூ. 25,72 லட்சம் தொடங்கி ரூ. 30.68 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த தொகை நமக்கு வேண்டுமானாலும் மிகப் பெரியதாக தெரியலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பெரிய பொருட்டே இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 5:00 [IST]
English summary
Rajini used toyota innova hycross to visit sasikala house
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X