சூப்பர் ஸ்டார் கிட்ட 2 ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கா... அம்பாசிடரில் தான் அதிகம் பார்த்திருக்கிறோம்!!
சூப்பர் ஸ்டார் (Super Star) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நடிகர் ரஜினிகாந்தை தான். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தார்கள், இதன்பின்பும் பல சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள். இருந்தாலும், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முழு சொந்தக்காரர் ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால் அவரோ எந்தவொரு ஆடம்பரத்தையும் விரும்பாத எளிமையான மனிதர் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். ஜெயிலர் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் வரியை போல் 3 தலைமுறை ரசிகர்களை சம்பாதித்து, இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.
இன்று (டிசம்பர் 12), நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் ஆகும். வயது கூடிக்கொண்டே போனாலும், அவரது ஸ்டைலிலும், எனர்ஜியிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே எனர்ஜியுடன் 170க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்திடம் உள்ள முக்கியமான சில விலையுயர்ந்த சொகுசு கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost): நடிகர் ரஜினிகாந்திடம் இரு ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.95 கோடியில் இருந்து ரூ.7.95 கோடி வரையில் உள்ளன. இதில், ரூ.7.95 கோடியில் கோஸ்ட் கார் இன்னும் கூடுதல் நீளத்தில் கிடைக்கிறது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.
ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் (Rolls-Royce Phantom): மேலே கண்ட கோஸ்ட் காரை விட விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கார் இதுவாகும். சீரிஸ்-2 மற்றும் எக்ஸ்டென்டட் வீல்பேஸ் என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் பண்டோம் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.99 கோடி மற்றும் ரூ.10.48 கோடியாக உள்ளது. பொதுவாகவே, ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை அப்படியே கஸ்டமர்கள் வாங்க மாட்டார்கள். மேலும் சில கோடிகளை செலவு செய்து, தங்களது விருப்பத்திற்கு ஏற்ப காரை மாற்றிக் கொள்வர்.

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான உருஸ் உலகளவில் லம்போர்கினி நிறுவனத்தை மேலும் பிரபலமடைய செய்துள்ளது. லம்போர்கினியின் புதிய முயற்சியில் வெளிவந்த உருஸ் காருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்திடமும் உள்ள இந்த லக்சரி எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.57 கோடியாக உள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (Mercedes-benz G-Class): இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுள் ஒன்று இதுவாகும். ஜி-கிளாஸ் ஏஎம்ஜி ஜி63 காரின் விலை சுமார் ரூ.4 கோடியாக உள்ளது. ஆனால், நடிகர் ரஜினிகாந்திடம் இருப்பது நார்மல் ஜி-கிளாஸ் என கூறப்படுகிறது. இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.2.55 கோடி ஆகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5): பிஎம்டபிள்யூவின் லக்சரியான எஸ்யூவி கார், எக்ஸ்5 ஆகும். எக்ஸ் லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.97 லட்சத்தில் இருந்து ரூ.1.12 கோடி வரையில் உள்ளன. இதில் எந்த வேரியண்ட்டை நடிகர் ரஜினிகாந்த் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் இந்த பிஎம்டபிள்யூ கார் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா (Toyota Innova): பணக்காரர்கள் ஆன உடன் நிறைய பேர் வாங்குவது இன்னோவாவை தான். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் உள்ளது. ஆதலால், இப்படிப்பட்ட கார் நடிகர் ரஜினிகாந்திடம் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இந்தியாவில் தற்சமயம் இன்னோவா ஹைகிராஸ் என்கிற ஹைப்ரீட் காரும் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்களின் விலைகள் எல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், கார் மாடலுக்கு ஏற்ப ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இருப்பினும், இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு இது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது.


Click it and Unblock the Notifications









