எப்பேர்பட்ட மனுஷன்! விமானத்தில் கூட்டத்தோடு கூட்டமா வந்தது அவரா! திடீர்னு பார்த்ததும் வாயை பிளந்த பயணிகள்!
வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். குறைந்தபட்சம் எகானமி வகுப்பு (Economy Class) இருக்கைகளிலாவது அமர்ந்து பயணம் செய்து விட வேண்டும் என்ற ஆசையுடன் பலர் வாழ்ந்து கொண்டுள்ளனர். சாமானிய மக்கள் விமானத்தில் பயணம் செய்வதே பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
அப்படி இருக்கும்போது ஃபர்ஸ்ட் கிளாஸ் (First Class) இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவது என்பது நடைமுறையில் சற்று கடினமான விஷயமாகதான் உள்ளது. விமானங்களில் எகானமி வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

எகானமி வகுப்புடன் ஒப்பிடும்போது, முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் (Ticket Price) மிகவும் அதிகம். அதற்கு ஏற்ப முதல் வகுப்பில் சௌகரியமான பயணத்தை அனுபவிக்க முடியும். முதலில் உணவின் தரம் மாறுபடும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அதாவது எகானமி வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்படுவதை காட்டிலும், முதல் வகுப்பு பயணிகளுக்கான உணவு சுவையானதாகவும், தரமாகவும் இருக்கும்.
அத்துடன் உணவு எப்படி வழங்கப்படுகிறது? என்பதும் மாறுபடும். இதுதவிர இருக்கை, இடவசதி ஆகிய அம்சங்களும் மாறுபடும். எகானமி வகுப்பை விட, முதல் வகுப்பு இருக்கைகள் அகலமாக இருக்கும். அங்கு கால்களை வைத்து கொள்வதற்கு போதுமான இடவசதியும் இருக்கும். ஆனால் இதை எல்லாம் எகானமி வகுப்பில் எதிர்பார்க்க முடியாது.

எகானமி வகுப்பு இருக்கைகளில் அசௌகரியமாக அமர்ந்து கொண்டுதான் பயணம் செய்தாக வேண்டும். எகானமி வகுப்பில் பயணம் செய்யும்போது, எப்போதுதான் விமானம் தரையிறங்குமோ? என்ற உணர்வுதான் ஏற்படும். எனவே தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றோர் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் அரிதிலும் அரிதாக அவ்வப்போது பிரபல மனிதர்களை நம்மால் எகானமி வகுப்பில் பார்க்க முடிகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar). கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்திருந்தார். அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள் தற்போது மற்றொரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) எகானமி வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் விண்டோ இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இது ரஜினிகாந்த்தின் எளிமையை காட்டுவதாக அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரஜினிகாந்த் எகானமி வகுப்பில் பயணம் செய்வது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் அவர் எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார். இது அவரது எளிமையை காட்டுவதாக உள்ளது. தற்போது எடுக்கப்பட்ட வீடியோ, ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம் கடப்பா விமான நிலையத்திற்கு (Kadapa Airport) செல்லும்போது பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








