நம்பர் பிளேட்டை பாத்ததும் ஆடிப்போன மக்கள்! ரஜினி ஏன் இப்படி செஞ்சார் தெரியுமா? அடுத்த படம் 200 நாள் ஓடும்!
புகழின் உச்சத்தில் இருந்தாலும் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மிகவும் எளிமையாக நடந்து கொள்ள கூடிய ஒரு மனிதராக அறியப்படுகிறார். அவரது எளிமையை பறைசாற்றும் வகையில் தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 73 வயதாகிறது (Age). ஆனால் இன்னமும் இளைஞர்களை போல் அவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் (Films) திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதில் ஜெயிலர் (Jailer), லால் சலாம் (Lal Salaam) போன்றவை முக்கியமானவை.

லால் சலாம் படத்தை பொறுத்தவரையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பை சென்றுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வரும் காட்சிகள் இணையத்தில் தற்போது காட்டு தீயாய் பரவி வருகின்றன. இந்த வைரல் வீடியோவை (Viral Video) பார்த்த பலரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எளிமையை மனதார பாராட்டி வருகின்றனர். அவர் மிகவும் எளிமையாக உடை அணிந்து கொண்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
அதை விட ஆச்சரியம் என்னவென்றால், சாதாரண ஒரு காரில் அவர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்தியது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஆகும். இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த பிரபலமான கார்களில் ஒன்று.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரேஞ்ச் உடன் ஒப்பிடும்போது, இது மிகவும் சாதாரணமான ஒரு கார்தான். அதே நேரத்தில் இந்த காரின் நம்பர் பிளேட் (Number Plate) மஞ்சள் நிற பின்னணியில் இருக்கிறது. இதில், எண்களும், எழுத்துக்களும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளன. வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கார்களில்தான் இப்படியான நம்பர் பிளேட் இருக்கும்.
எனவே இது வாடகை காராக (Rental Car) இருக்கலாம். சாதாரண டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயணம் செய்ததே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிலையில், வாடகை காரை அவர் பயன்படுத்தியிருப்பது நமது ஆச்சரியத்தை இன்னும் மேலோங்க செய்கிறது. ஒரு சில படங்களில் நடித்த நடிகர், நடிகைகளே மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற விலை (Price) உயர்ந்த கார்களில் வலம் வந்து கொண்டுள்ளனர்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மிகவும் பிடித்த கார்களில் ஒன்றாக உள்ளது. எனவே அவர் அதில் பயணம் செய்வதை விரும்பியிருக்கலாம். ஆனால் ஏன் வாடகை காரில் பயணம் செய்தார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இந்த சந்தேகம் பலர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், இது சூப்பர் ஸ்டாரின் எளிமையை எடுத்துக்காட்டுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சாதாரண காராக இருந்தாலும் கூட நம்பகத்தன்மை வாய்ந்தது. பல லட்சம் கிலோ மீட்டர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடும் திறன் இதற்கு உண்டு. அத்துடன் உங்களுக்கு இந்த கார் நிச்சயம் சௌகரியமான பயணத்தை வழங்கும். இந்த காரில் ஏறி, இறங்குவதும் எளிமையான ஒரு விஷயம்தான். எனவே சூப்பர் ஸ்டாரை போல், இன்னும் பல்வேறு பிரபலங்களும் இந்த காரை விரும்புகின்றனர்.
இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எளிமை தங்களை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தி வருவதாக ரசிகர்கள் பலர் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ரசிகர்களை கவர்ந்து கொண்டே இருப்பதால், அவரது நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








