அமெரிக்காவில் ஃபெராரி காரில் வலம் வரும் ரஜினிகாந்த்; செல்ஃபி வீடியோ சொல்லும் ரகசியம்..!!

Written By:

காலா படத்தின் படப்பிடிப்பு, அரசியல் களத்தில் தொடரும் சர்ச்சை ஆகியவற்றுக்கு நடுவில், அமெரிக்காவிற்கு சென்ற ரஜினிகாந்த் அங்கு ஒரு கார் பயணத்தில் உற்சாகமாக எடுத்த முதல் செல்ஃபி விடியோ வெளியானதை தொடர்ந்து அது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

மருத்துவ பரிசோதனைக்காக அவர்சென்றதாக கூறி ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் சூதாட்ட விடுதி ஒன்றில் ரஜினிகாந்த விளையாடுவது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

இதற்கு பிறகு ரஜினிகாந்த அமெரிக்காவிற்கு சென்றுள்ளதன் காரணம் என்ன, எதற்காக சூதாட்ட விடுதிக்கு சென்றார் என்று பலரும் தங்களது சமூக வலைதள பங்கங்களில் விவாதிக்க தொடங்கினர்.

இந்நிலையில் ஓடும் காரில் ரஜினிகாந்த முதன்முதலாக எடுத்த செல்ஃபி விடியோ வெளியாகி ரஜினியின் அமெரிக்கா பயணத்தை குறித்து மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

தன் ஓட்டுநருடன் காரில் செல்லும் ரஜினி, இந்த ரெட் பட்டனைத்தான ஆன் பண்ணணும் என்று கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுநரும் செல்ஃபி விடியோ எடுப்பதை பற்றி ரஜினிக்கு சொல்லித்தருகிறார்.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

ரஜினி முதன்முதலாக எடுத்துள்ள இந்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட் அடித்து வருகிறது

குறிப்பாக இந்த வீடியோவில் ரஜினி காந்த் எந்த காரில் அமரிந்திருக்கிறார் என்பதும் குறித்தும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

முதன் முதலாக ரஜினி காந்த எடுத்து வெளியான செல்ஃபி வீடியோவில், அவர் ஃபெராரியின் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் ஒன்றில் வலம் வருவதாக சொல்லப்படுகிறது.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல், ஆடம்பர கார்களின் பக்கம் கூட ரஜினிகாந்த் திரும்பியதில்லை.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

இந்நிலையில், அவர் அமெரிக்காவில் ஃபெராரி ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வைத்திருக்கும் அளவிற்கு, ரஜினிக்குள் பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.

1980 முதல் 1990கள் வரை ப்ரீமியர் பத்மினி தான் ரஜினிகாந்தின் ஆஸ்தான வாகனம். பிறகு 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் அம்பாஸிடர் கார் வைத்திருந்தார்.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

சென்னையில் படப்பிடிப்பு என்றால், சிவிக் காரில் வலம் வருவார். இதுவே சென்னையை தாண்டி படப்பிடிப்பு என்றால், அதற்காக இன்னாவோ பயன்படுத்தி வந்தார்.

அவர் பயன்படுத்தி வந்த இன்னாவோ காரும் பெரியளவில் கஸ்டமைஸ் வசதி செய்யப்படாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

இதற்கிடையில் ஆடி, பி.எம்.டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் என எந்தவிதமான ஆடம்பர பிராண்டு வாகனங்களிலும் ரஜினியை யாரும் பார்த்தது கிடையாது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

ரா.ஒன் படத்தில் ஒரு கவுரவ தோற்றத்தில் நடித்ததற்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரஜினிக்கு பி.எம்.டபுள்யூ 7 சிரீஸ் காரை பரிசளித்தார். அனால் அதை வாங்க மறுத்துவிட்டார்.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

தற்போது அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ள ரஜினி ஜூலை மாத மத்தியில் வீடு திரும்புவார் என்றும், அவருக்கு துணையாக மகள் ஐஸ்வர்யா தனுஷ் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

காலா படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஜினி இந்தியா திரும்பிய பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு ஆடம்பர வாகனங்கள் மீது ஆசையே இல்லாத ரஜினி, சமீபத்தில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த போது ரூ.68 லட்சம் மதிப்புடைய பி.எம்.டபுள்யூ எக்ஸ் 5 எஸ்.யூ.வி ரக காரில் வந்திறங்கினார்.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

இதுபலருக்கு ஆச்சர்யம் அளித்தது. தனுஷின் காராக இருக்கலாம் என்று எண்ணிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சந்திப்புக்களுக்கும் அதே காரில் தான் வந்திறங்கினார் ரஜினிகாந்த்.

இதற்கு பிறகு தற்போது செல்ஃபி விடியோவில் ஃபெராரி காரில் செல்வது போல காட்சி தருகிறார். ரஜினிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமும் அவரது ரசிகர்களிடம் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

ரஜினி எதை செய்தாலும் அதை உடனே டிரென்டாக்கும் அவரது ரசிகர்கள், ஃபெராரி காரையும் வாங்கி அதன் மீது இந்திய சந்தையில் புதிய டிரெண்டை உருவாக்கும் செயலை கூட செய்வார்கள்.

ஆடம்பர காரை சொந்தமாக வைத்திருக்கவில்லை என்றாலும், ரஜினி நடித்த பல படங்களில் அவர் விலை உயர்ந்த கார்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

ஃபெராரி காருக்கு மாறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!

குறிப்பாக லிங்கா படத்தின் ரஜினி பல்வேறு ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மற்றும் விண்டேஜ் கார்களை ஓட்டுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு பிறகு கபாலி படத்தின் ரஜினிகாந்த அட்டகாசமாக கார் ஓட்டி, அதில் மிரட்ட வைக்கும் அளவிற்கு ஸ்டெண்ட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது, பலரால் பாராட்டப்பட்டது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rajinikanth Rides Ferrari Sports Car in America, Goes Viral. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos