எந்த ரூட்ல போன டோல் செலவு கம்மி? கண்டுபிடிக்க வருகிறது புதிய ஆப்!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலயை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் சுங்ககட்டணம் குறைவாக செலுத்தலாம் என்பதை கண்டறியும் புதிய ஆப்பை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் வெளியிடவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்க கட்ட விதிமுறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வரப்பேவதாக அறிவித்திருந்தது. அதன்படி தனி நபர் கார்களுக்காக வருடாந்திர பாஸ் கட்டணத்தை தற்போது அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் இந்தவருடாந்திர பாஸ் அமலுக்கு வருகிறது இந்நிலையில் அடுத்த புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Rajmargyatra App

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வெளியிடப்ப்டுள்ளது.ராஜ்மார்க்யாத்ரா செல்போன் ஆப்பை பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடத்திற்கு எந்த ரூட்டில் பயணித்தால் குறைவான சுங்க கட்டணம் செலவாகும் என்பதை கணக்கிட முடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறை பயணிகள் தங்கள் டிரிப்பை மேம்படுத்துவது, குறைவான செலவில் பயணிப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த செல்போன் ஆப்பை கொண்டு வரப்போவதாக தெரிவகி்கப்பட்டுள்ளது. இதை தேசிய ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி தரப்பில் இருந்து வெளியிடப்படவுள்ளது.

Rajmargyatra App
Rajmargyatra App

இந்த ஆப்பிற்கான அப்டேட் வெளியிடப்பட்ட உடன் எந்த ரூட்டில் பயணித்தால் குறைவான செலவில் பயணிக்கலாம் என்ற தகவலை பெறலாம். உதாரணமாக சென்னை டூ கோவை செல்ல வேண்டும் என்றால் 2 ரூட் இருக்கறது. உளுந்தூர் பேட்டையிலிருந்து சேலம் வழியாகவும் செல்லலாம், கரூர் வழியாகவும் செல்லலாம். இந்த இரண்டு ரூட் வழியாக சென்றால் எவ்வளவு சுங்க கட்டணம் செலவாகும் என்ற தகவலை பெறலாம். இதனால் நீங்கள் குறைந்த செலவு கொண்ட ரூட்டை தேர்வு செய்து பயணிக்கலாம்.

இதனால் குறைவான பயண செலவை பெற முடியும். இந்த ஆப் தேவை நீண்ட ஆண்டுகளாக மக்களுக்கு தேவையானதாக இருக்கிறது. ஒவ்வொரு சுங்க சாவடியிலும் ஒவ்வொரு வகையான கட்டணம் வசூலிக்கப்படுவதால் இதை கணக்கிடுவது சிரமமாக இருந்தது. இனி அப்படி இருக்காது. கிளம்பும் போதே எந்த ரூட்டில் பயணித்தால் குறைவாக செலவாகும் என்பதை கணக்கிட முடியும்.

இதனால் பயண செலவுகளை முன்னரே துள்ளிமாக திட்டமிட வாய்ப்புள்ளது. பலர் சங்க கட்டணம் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவர்கள் அதிக சுங்க கட்டணம் செலவாகும் பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப் அப்டேட்டிற்கு பிறகு இனி தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆப் நீண்ட நாள் தேவையாக இருக்கிறது. இதனால் இந்த அப்டேட் வந்தவுடன் மக்களுக்கு இது மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும். இதே நேரம் தூரத்தையும் கணக்கிட்டு, பெட்ரோல் செலவுகளையும் கணக்கிட்டும் புதிய ஆப் வந்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 29, 2025, 19:00 [IST]
English summary
Rajmargyatra app helps motorists find lowest toll highway routes
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X