ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? வேற லெவல் ரசிகர்களுக்கு சிக்கல்?

18 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில், ரஜினிகாந்தின் காலா படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி, அந்த படத்திற்கு தனது காரை அர்ப்பணித்துள்ளார் ரசிகர் ஒருவர்.

By Arun

18 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில், ரஜினிகாந்தின் காலா படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி, அந்த படத்திற்கு தனது காரை அர்ப்பணித்துள்ளார் ரசிகர் ஒருவர். ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சட்ட விரோதமா? என்பது குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

இந்தியா முழுவதும் ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாம் அறிந்ததுதான். ஆனால் காலா திரைப்படம் வெளியாகும் முன்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அளித்த ஒரு பேட்டியில், சமூக விரோதிகள் என குறிப்பிட்டு ரஜினி பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை உண்டாக்கின.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

இதனால் காலா திரைப்படத்திற்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் எழுந்ததாக பரவலாக கூறப்பட்டது.ஆனால் ரஜினி ரசிகர்கள், எப்போதும் போல அந்த படத்தை கைவிடவில்லை. காலா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

பொதுவாக ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளியாகும்போதும், அவரது ரசிகர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினி-ரஞ்சித் கூட்டணியின் முந்தைய படமான கபாலி ரிலீஸ் ஆனது.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

அப்போது வழக்கத்தை காட்டிலும் அதிகப்படியான உற்சாகம் நிலவியது. கபாலி ரீலிஸை, ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர். இதனை முன்னிட்டு சாதாரண மாருதி சுசூகி ஸ்விப்ட் கார் முதல் விலை உயர்ந்த நிஸ்ஸான் ஜிடி-ஆர் கார் வரை, கபாலி படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி தள்ளினர்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

கார்கள் முழுவதும் கபாலி படத்தின் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டன. ஏர் ஆசியா நிறுவனம் கூட தனது விமானத்தில், கபாலி படத்தின் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

இந்நிலையில் தற்போது காலா படத்தின் ரிலீஸை கொண்டாடும் விதமாக, ரசிகர் ஒருவர் தனது ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் முழுவதும், அந்த படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி தள்ளியுள்ளார்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

மஹேந்திரா தார் காரின் பானெட் மீது ரஜினி அமர்ந்திருப்பது போன்ற காலா படத்தின் போஸ்டர்கள் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. அந்த போஸ்டரை தனது ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பானெட்டிலும், அந்த ரசிகர் ஒட்டியுள்ளார். பானெட் முழுவதையும் மறைக்கும் அளவிற்கு பெரிய அளவில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

அதே நேரத்தில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பின்பக்க விண்டுஷீல்டில், காலா படத்தின் மற்றொரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய போஸ்டர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு, காரின் பாடியில் பேஸ்ட் செய்யப்படுகின்றன. ரியர் விண்டுஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சன்ஷேடு ஆகவும் பயன்படும்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரானது, 18 லட்சம் முதல் 26 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. இவ்வளவு அதிக விலை கொண்ட காரையே, அந்த ரசிகர் காலா படத்திற்காக அர்ப்பணித்துள்ளார்!!!

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

ஆனால் இதனை செய்த ரசிகர் யார்? இந்த படங்கள் எங்கே எடுக்கப்பட்டது? என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதுபோன்ற ரசிகர்கள் இருப்பதால்தான், அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

இந்த நேரத்தில் கார்களின் பாடியில் போஸ்டர்களை ஒட்டுவது சட்ட விரோதமா? இல்லையா? என்பது போன்ற சந்தேகம் நம் மனதில் எழலாம். இத்தகைய போஸ்டர்கள் மற்றும் மறைப்புகள் (wraps) சட்ட விரோதம் இல்லை. எந்த காரில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

காரின் நிறத்தை மாற்ற, சில பாடி wraps-களை மக்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த கார் முழுவதும் பெயிண்ட் செய்வதை காட்டிலும் இது பயனுள்ள தீர்வு ஆகும். கார் முழுவதும் பெயிண்ட் செய்தால், ஆர்சி புத்தகத்திலும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

இதனிடையே ரஜினிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் கூட, தமிழகத்தில்தான் மிக அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள்தான் இதுபோன்ற வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

எனவே இனிவரும் நாட்களில், காலா படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட மேலும் பல சாதாரண மற்றும் ஹை எண்ட் கார்கள் சாலைகளில் உலா வரும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? ஜீப் காம்பஸை அர்ப்பணித்த ரசிகர்!!!

முன்னதாக காலா படத்தில் ரஜினி பயன்படுத்திய மஹேந்திரா தார் காரை, மஹேந்திரா அண்ட் மஹேந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹேந்திரா வாங்கியுள்ளார். அதை தனது மியூசியத்தில் வைத்து அவர் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Saturday, June 9, 2018, 14:18 [IST]
English summary
Rajnikanth’s Kaala-inspired Jeep Compass SUV takes fan following to an all-new level. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+