காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

காலா படத்தில், பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ளார். அது ஏன்? என்பது குறித்தும், விசேஷமான அந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்தும், பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது காலா படத்தை 'ப்ரமோட்' செய்யும் பணிகளில் 'பிஸி' ஆக உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காலா திரைப்படம், வரும் ஜூன் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

காலா திரைப்படத்தில், சில சுவாரசியமான வாகனங்களை ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ளார். அதில் ஒன்று மகேந்திரா தார் கார். மகேந்திரா தார் காரில், ரஜினிகாந்த் அமர்ந்திருப்பது போன்ற காலா திரைப்படத்தின் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகின.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

இதனால் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகேந்திரா உச்சிகுளிர்ந்து போனார். காலா திரைப்படத்தில், எங்கள் நிறுவனத்தின் தார் கார் பெருமிதம் செய்யப்பட்டுள்ளது என அவர் டிவிட் ஒன்றையும் செய்தார்.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தியிருக்கும் மற்றொரு குறிப்பிடத்தகுந்த வாகனம், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக். காலா திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா தார் காரில், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வரிசையில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கிலும் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தியுள்ள ஆர்எக்ஸ் 100 பைக் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. முன் சக்கர மட்கார்டும் நீளமான வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக், கடந்த 1986ம் ஆண்டு சமயத்தில், இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் விற்பனை சக்கை போடு போட்டது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் 98 சிசி, 2 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,500 ஆர்பிஎம்மில் 11.50 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 8.60 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் எடை 96 கிலோ கிராம்.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

யமஹா என்ற நம்பகமான ஜப்பானிய நிறுவனத்தின் இன்ஜினில் இருந்து வெளிப்படும் இத்தகைய பவர் அவுட் புட், இலகுவான எடை ஆகியவை இணைந்து, ஆர்எக்ஸ் 100 பைக் சீறிப்பாய உதவுகின்றன. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிலோ மீட்டர்.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

தற்போது யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை, இந்திய சாலைகளில் பார்ப்பது என்பது மிகவும் அரிதாகி வருகிறது. ஆனால் என்ன விலை கொடுத்தேனும், யமஹா ஆர்எக்ஸ் பைக்கை வாங்கி விட வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இன்னமும் உள்ளது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, செகண்ட் ஹேண்டில் 15,000 ரூபாய் என்ற விலையில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் விற்பனையானது. இன்று அதே பைக்கின் விலை 50,000 ரூபாய். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில், 1 லட்ச ரூபாய்க்கு யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

அதாவது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில், ஒரு 2 ஸ்ட்ரோக் சூப்பர் பாஸ்ட் பைக்கின் விலை, சில 250 சிசி நவீன ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் விலைக்கு சரி சமமாக உள்ளது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

பஜாஜ் பல்சர் பைக் பிரபலம் ஆக, தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் பேருதவி புரிந்தது. அந்த தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள காலா திரைப்படம், கிளாசிக் செக்மெண்டில், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை இன்னும் பிரபலமாக்கி, அதன் புகழை மற்றொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

அதாவது ரஜினிகாந்தும், யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கும், நமது 1980, 90ம் ஆண்டு நினைவுகளை, ஒரே ப்ரேமில் மீண்டும் திரையில் கொண்டு வரக்கூடும். கடந்த கால நினைவுகளை கொண்டு வருவதற்காகதான், ஆர்எக்ஸ் 100 பைக், காலா திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில், பெரிய அளவில் கருத்துக்களை கூறியது கிடையாது. மௌனமே அவரது கருத்தாக இருக்கும். ஆனால் அரசியலில் குதித்தபின், அவரது இந்த நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது. அதாவது சமீப காலமாக சற்று ஆணித்தரமான கருத்துக்களை ரஜினிகாந்த் முன்வைத்து வருகிறார்.

காலா படத்தில் பச்சை நிற ஆர்எக்ஸ் 100 பைக்கை ரஜினி பயன்படுத்தியது ஏன்?

இதனால் உலகம் முழுவதும் வெளியானாலும், கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படம் திரையிடப்படாது. கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படத்தை வெளியிட, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள், கர்நாடகாவுக்கு எதிராக இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: GQIndia

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rajnikanth’s ride in Kaala is a vintage, modified Yamaha RX100. read in tamil.
Story first published: Wednesday, May 30, 2018, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X