அந்த பிரபல நடிகரின் தந்தையா இது? 75 வயது என சொன்னால் சத்தியமா நம்பவே முடியல! புதுசா வாங்கியிருக்கும் கார்!!
ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் மிக பிரபலமான நடிகர்கள் (Actors) லிஸ்ட்டை எடுத்து பார்த்தால், அதில் ஹிருத்திக் ரோஷனின் பெயரும் இருக்கும். மிகவும் ஆணழகனான நடிகர் என்று சொல்லலாம். 50 வயது கடந்துவிட்ட போதிலும், இப்போதும் அதே ஹேண்ட்சம் (Handsome) & கம்பீரத்துடன் இருக்கும் நடிகர் ஹிருந்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் (Rakesh Roshan) இவருக்கு மேல். 75 வயது தாண்டிவிட்டது, இருந்தாலும் காஷ்மீர் ரோஜா போல் இப்போதும் அதே புத்துணர்ச்சி உடன் இருக்கிறார்.
சம்பந்தமே இல்லாமல் ராகேஷ் ரோஷனை பற்றி ஏன் பார்க்கிறோம் என நினைக்கிறீர்களா? நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட ராகேஷ் ரோஷன் புதியதாக ரூ.1.50 கோடி மதிப்பிலான டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) காரை வாங்கியுள்ளார். 85க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் ராகேஷ் ரோஷன், பெரிய பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களில் நிச்சயமாக துணை கதாபாத்திரங்களில் இருப்பார்.

அந்த அளவிற்கு பணக்கார மனிதரின் முக ஜாடை ராகேஷ் ரோஷனின் முகத்தில் தாண்டவமாடுகிறது. 1970, 80களில் நடித்து நடித்து அலுத்து போனவர், திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஆரம்பத்தில் சில திரைப்படங்கள் பெரிய ஹிட் கொடுக்காவிடினும், 2003இல் மகன் ஹிருத்திக் ரோஷனை வைத்து எடுத்த 'கோய்... மில் கயா' திரைப்படம் இயக்குனர் ராகேஷ் ரோஷனுக்கு பல விருதுகளை பெற்று கொடுத்தது.
நாடு முழுவதும் பிரபலமான 'கிரிஷ்' சூப்பர்ஹீரோ திரைப்படமும் ராகேஷ் ரோஷனின் யோசனையில் இருந்து வந்ததுதான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 14 திரைப்படங்களை பணம் போட்டு ராகேஷ் ரோஷன் தயாரித்தும் உள்ளார். இவ்வாறு பாலிவுட் (Bollywood)-இன் தவிர்க்க முடியாத விஐபி (VIP) ஆக விளங்கும் ராகேஷ் ரோஷன் இந்த 2024ஆம் ஆண்டில் வாங்கியுள்ள 2வது கார் இந்த டொயோட்டா வெல்ஃபையர் ஆகும்.

சில மாதங்களுக்கு முன்புதான், ராகேஷ் ரோஷன் அவரது புத்தம் புதிய மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 (Mercedes-Maybach S580) காரில் காட்சி தந்திருந்தார். இப்போதும், புத்தம் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரில் வெளியில் காட்சி தந்திருப்பதன் மூலமாகவே இந்த காரை புதியதாக ராகேஷ் ரோஷன் வாங்கியுள்ளதாக நாங்கள் கூறுகிறோம். ஓர் பொது நிகழ்ச்சியில் கலந்துவிட்டு திரும்பிய போது ராகேஷ் ரோஷனை கேமராக்காரர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் வேறு வழியில்லாமல், சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த ராகேஷ் ரோஷன், பின்னர் தனது புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். அதாவது, இந்த நிகழ்வின்போது காரை அவர் ஓட்டவில்லை. வெல்ஃபையர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது டொயோட்டாவின் விலைமிக்க எம்பிவி (MPV) காராக விளங்குகிறது.

வெல்ஃபையரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.22 கோடி மற்றும் ரூ.1.33 கோடி ஆக உள்ளன. ஹை மற்றும் விஐபி-எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் என 2 விதமான வேரியண்ட்களில் வெல்ஃபையர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டை நடிகர் ராகேஷ் ரோஷன் வாங்கினார் என்பது தெரியவில்லை. விலைமிக்க காராக இருப்பினும், வெல்ஃபையரை வாங்குவதற்கு இந்தியாவில் பெரிய டிமாண்ட் உள்ளது.
இதன் காரணமாக, இப்போது புக் செய்தால் 14 மாதங்கள் கழித்தே கார் டெலிவிரி கிடைக்கும் சூழல் உள்ளது. கடைசியாக இந்தியாவில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெல்ஃபையர் காரை டொயோட்டா அப்டேட் செய்திருந்தது. வெல்ஃபையரில் பொருத்தப்படும் 2.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 240 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராகேஷ் ரோஷன் போன்றோர்க்கு டொயோட்டா வெல்ஃபையர் கூட விலை குறைவான கார் ஆகும். சிறிய தூர பயணங்களுக்காக இந்த காரை இவர் வாங்கி இருப்பார் என நினைக்கிறோம். ஆக மொத்தத்தில் ராகேஷ் ரோஷனின் கேரேஜில் புதியதொரு விலையுயர்ந்த கார் ஒன்று இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









