அழகு பதுமையை பார்த்ததும் போலீஸ் செய்த காரியம்! வீடியோவை பார்த்ததும் எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க!
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant) எப்போதுமே மீடியா வெளிச்சத்தில் இருக்க கூடியவர். இந்த சூழலில், மும்பை நகர சாலைகளில் தற்போது அவர் செய்துள்ள ஒரு காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது.
தனது பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) காரின் சன்ரூஃப் வழியாக, ராக்கி சாவந்த் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டு வருவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. போட்டோகிராபர்கள் மட்டுமல்லாது, அங்கிருந்த பொதுமக்கள் பலரும் ராக்கி சாவந்த்தை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

பிரபல நடிகையான ராக்கி சாவந்த்தை திடீரென பொது சாலையில் பார்த்ததும், பொதுமக்கள் பலர் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டனர். பொதுமக்கள் மட்டுமா? காவல் துறையும்தான்! ராக்கி சாவந்த்தின் இந்த நடவடிக்கைகள், அவ்வழியாக வந்த காவல் துறையின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விட்டது.
போலீஸ் வாகனம் அங்கு வந்து நின்றதும், ராக்கி சாவந்த் அவர்களிடம் சென்றார். இங்கு என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? என்ற அவர்களின் கேள்விக்கு, பொதுமக்களுக்கு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். சிறிது நேரம் விசாரணை நடத்தியபின், காவல் துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதன்பின் ராக்கி சாவந்த் தொடர்ந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க தொடங்கினார். சாலையில் ஓடுவது, அனைவரிடமும் பேசுவது என அந்த பகுதியையே அவர் அதிர செய்து விட்டார். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், கார் ஓடி கொண்டிருந்தபோதே ராக்கி சாவந்த் சன்ரூஃப் மூலம் உடலை வெளியே நீட்டி கொண்டு பயணித்தார்.
இது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும். தவிர்க்க முடியாத சூழல்களில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தாலோ அல்லது வளைவுகளில் திரும்பினாலோ படுகாயங்கள் ஏற்பட நேரிடலாம். ஆனால் பலரும் இதனை உணர்வது கிடையாது. சன்ரூஃப் ஒருவருக்கு உற்சாகத்தை வழங்குகிறது.
அத்துடன் சன்ரூஃப்கள் நமக்கு மிகவும் த்ரில்லான அனுபவத்தையும் கொடுக்கின்றன. எனவேதான் சன்ரூஃப் வசதி உள்ள கார்களை வாங்குவதற்கு தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்களில் தற்போது சன்ரூஃப் வசதி கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்திய சந்தையின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) கூட தனது கார்களில் தற்போது சன்ரூஃப் வசதியை வழங்க தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வசதி இருக்காது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமான மனிதர்கள் எதை செய்தாலும், அதை அப்படியே திருப்பி செய்வதற்கு இந்தியாவில் ஒரு பெரிய கூட்டமே காத்து கொண்டுள்ளது. எனவே பிரபல மனிதர்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சன்ரூஃப்களுக்கு பின்னால் உள்ள ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், பிரபலங்கள் ஆபத்தான முறையில் பயன்படுத்தினால், ரசிகர்களும் அதையேதான் செய்வார்கள். எனவே பிரபலங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாக உள்ளது. அதேபோல் அவர்கள் எந்த வகையிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்வதும் நல்லது.


Click it and Unblock the Notifications