நடிகை ராக்கி சாவந்த்திற்கு அடித்த ஜாக்பாட்... ஆடி காரையே பரிசாக தூக்கி கொடுத்த ரசிகர்.. புதுசா இல்ல பழசா!
ராக்கி சாவந்த், இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார். நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என ரோல்களை அவர் பாலிவுட் திரையுலகில் மேற்கொண்டு வருகின்றார். இந்த மாதிரியான ஓர் நடிகைக்கே அவருடைய பணக்கார ரசிகர்கள் ஓர் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்.
ஆடி சொகுசு காரே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. பரிசாகக் கொடுக்கப்பட்டு இருக்கும் துள்ளியமான கார் மாடல் பற்றிய விபரங்கள் தெரிய வரவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களை வைத்து பார்க்கையில் அது 11 ஆண்டுகள் பழைய ஆடி சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் என்பது துள்ளியமாக தெரிகின்றது.

வெளிப்புற தோற்றத்தை வைத்து பார்க்கையில் இது ஆடி க்யூ3 (Audi Q3 SUV) என எங்களால் யூகிக்க முடிகின்றது. மேலும், வாஹன் தளத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவலின்படி எச்ஆர் 51 ஏயு 0939 (HR 51 AU 0939) என்கிற பதிவெண்ணைக் கொண்டிருக்கும் அந்த கார் மாடல் 2012 டிசம்பரில் ஹரியானா மாநிலம் குருகிராமில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இது ஓர் டீசல் எஞ்சின் கொண்ட கார் மாடல் ஆகும். இந்த காரையே ராக்கி சாவந்த்தின் தீவிர ரசிகர்களான ஆதில் கான் துரானி என்பவரே அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் இப்போதைய மதிப்பு ரூ. 28.07 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். டீசல் மேனுவல் வேரியண்டின் மதிப்பே இதுவாகும்.

இதே டீசல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருந்தால் அதன் மதிப்பு ரூ. 29.79க்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய அதிக மதிப்புக் கொண்ட காரையே ராக்கி சாவந்திற்கு பரிசாக அவரின் ரசிகர்கள் வழங்கி இருக்கின்றனர். இது மிக பழைய கார் மாடலாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் புதிதுபோல் இருக்கின்றது.
அதேவேளையில், டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் காற்று மாசுக்கு எதிராக கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அங்குள்ள டீசல் மற்றும் மிகவும் பழைய கார் மாடல்கள் சற்று குறைவான விலையில் மற்ற மாநிலங்களில் விற்கப்படுகின்றது. அந்தவகையில் குறைவான விலையில் வாங்கப்பட்ட கார் மாடலாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
தற்போது ராக்கி சாவந்த் மும்பையில் உள்ளார். இவர் துபாயில் குடிபுகுந்த நிலையில் சமீபத்திலேயே இந்தியா திரும்பினார். முன்னாள் கணவருடனாந கருத்து வேறுபாடு காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கு வழக்கு காரணமாக அவர் மும்பை வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவருடைய ரசிகர்கள் அவருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினர்.
இந்த கார் பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது ஓர் சர்ச்சையான சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது. ராக்கி சாவந்த் தன்னிடம் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகையிடம் கடுமையான நடந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவருக்கு எதிர்ப்பலை நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர் அவரை சாடி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக சொகுசு அம்சங்களும், வசதிகளும் நிறைந்த ஓர் சூப்பரான எஸ்யூவி ரக கார் மாடலே ஆடி க்யூ3 எஸ்யூவி ஆகும். இந்த கார் விற்பனைக்கு வந்த புதிதில் தொழிலதிபர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது கார் காதலர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு உண்டு.
அதேவேளையில் இந்த காரைக் காட்டிலும் சொகுசு அம்சங்கள் நிறைந்த கார் மாடல்கள் ஆடி நிறுவனத்திடம் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதால் பலர் அந்த கார் பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக ஆடி க்யூ3 பழைய கார் மாடல் அதிகளவில் செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








