லியோ பட குழுவுக்கே டஃப் கொடுப்பாங்க போல! பாடலில் நடனமாடிய நடிகைக்கு கூலியாக வழங்கப்பட்ட 14 ஆண்டுகள் பழைய கார்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரையில் வெளியிடப்பட இருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் பின்னணியில் நடனமாடிய டான்சர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சை தற்போது எழும்பி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் ஓர் இந்தி நடிகைக்கு பாடலில் முக்கிய பாத்திரமாக நடனமாடியதற்கு கூலிக்கு பதிலாக மிகவும் பழைய காரை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முக்கிய நடிகைகளில் ராக்கி சாவந்த்-ம் ஒருவர் ஆவார். முன்னணி டான்சராகவும், மாடலாகவும் அவர் இருக்கின்றார். இந்த நடிகைக்கே ஓர் பாடலில் நடனமாடியதற்கு பணம் தருவதற்கு பதிலாக 14 ஆண்டுகள் பழைய கார் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார்?, அதன் மதிப்பு என்ன என்பது பற்றி பார்க்கலாம், வாங்க.

A 14 year old car was given as a gift to rakhi sawant

14 ஆண்டுகள் பழைய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி ரக காரே ராக்கி சாவந்த்-திற்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சொகுசு காரிலேயே ராக்கி தற்போது தன்னுடைய பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார். இந்த பதிவெண்ணை வைத்து பார்த்தபோதே அந்த கார் 14 ஆண்டுகள் பழைய வாகனம் என்பது தெரிய வந்தது.

மேலும், டெல்லி பதிவெண்ணைக் கொண்டிருக்கும் அந்த கார் டெல்லியில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்படுவதற்கான என்ஓசி சான்றிற்கு விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதையும் தெளிவுப்படுத்தியது. இந்த நிலையிலேயே கார் பற்றி மேற்கொண்டு ஆராய்ந்ததில் பாடலுக்கான கட்டணமாக இந்த கார் ராக்கி சவந்திற்கு பரிசாக அளிக்கப்பட்டது தெரிய வந்திருக்கின்றது.

14 year old car was given as a gift

முற்றிலும் தனித்துவமான தோற்றம் கொண்ட காரே பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஆகும். கூபே காரை போல சறுவலான ரூஃப்-ஐ இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்தபோது 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டது. இந்த எஞ்ஜின் 232 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும்.

பிஎம்டபிள்யூவின் எக்ஸ்-டிரைவ் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இதன் அப்போதைய விலை ரூ. 76.68 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது தலைநகர் டெல்லியில் பத்து ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஒரு சிலர் தங்களுடைய சொகுசு வாகனங்களை மற்ற மாநிலத்தில் மிகவும் விலை குறைவாக விற்பனைச் செய்ய தொடங்கி இருக்கின்றனர். பலர் அடிமட்ட விலைக்கு விற்றுக்குக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே நடிகை ராக்கி சவந்திற்கு விலை உயர்ந்த சொகுசு கார் பாடலுக்கான கட்டணமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சொல்லப்போனால், மிக மிக குறைவான விலையில் வேற ஒரு நபருக்கு விற்கப்படுவதற்கு பதிலாக அந்த கார் ராக்கி சவந்திற்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

எலெக்ட்ரானிக் வசதிக் கொண்ட இருக்கை, லெதர் போர்த்தப்பட்ட நிலையிலும், க்ளைமேட் கன்ட்ரோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் இப்போதைய மதிப்பு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 43 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

ராக்கி சாவந்த் இடம் ஏற்கனவே ஒரு சில சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். அதேவேளையில், இவரிடத்தில் சொகுசு கார்கள் இல்லாத நேரத்தில் தன்னுடைய பயணங்களுக்கு பெரும்பாலும் ஆட்டோரிக்ஷா அல்லது கால் டாக்சிகளையே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகையிடமே தற்போது சொகுசு கார்கள் குவியத் தொடங்கி இருக்கின்றன. ஆகையால், கடந்த காலங்களில் நடிப்பு மற்றும் நடனத்திற்காக மட்டுமே அறியப்பட்டு வந்த நடிகை தற்போது சொகுசு கார்களை வைத்திருப்பதற்காகவும் அவரின் பெயர் மக்கள் வாயில் அடிபட தொடங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு கார்களுக்கான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சேல்ஸில் சொகுசு கார்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே சொகுசு கார் பரிசளிப்பு நிகழ்வும் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலை இவற்றின் விற்பனையை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 14:17 [IST]
English summary
Rakhi sawant got 14 year old bmw x6 as gifted here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+